»   »  பாஸ்.. நம்ம "மைல்" க்கு 52 வயசாச்சு தெரியுமா?

பாஸ்.. நம்ம "மைல்" க்கு 52 வயசாச்சு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலு இந்தப் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இது. இந்நேரம் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்களே ஆமாம் அந்த பெயருக்கு சொந்தக்காரர் நீங்கள் நினைத்ததுபோல நடிகை ஸ்ரீதேவியேதான்.

1963 ம் ஆண்டு தமிழ்நாட்டில் சிவகாசி நகரில் பிறந்த ஸ்ரீதேவி இன்று தனது 52 வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இன்றளவும் விளங்கும் நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய மொழிகள் தவிர்த்து இந்தியிலும் கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய திரைநட்சத்திரம் ஸ்ரீதேவி அவர்களின் திரைவாழ்க்கையைப் பற்றி இங்கே காணலாம்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

ஸ்ரீதேவி தனது 4 வது வயதில் துணைவன் என்ற பக்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தப் படத்தில் சிறுவயது முருகனாக நடித்து அசத்தியிருப்பார்.

நடிகையாக

நடிகையாக

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் தனது 13 வது வயதில் நடிகையாக ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடித்து, நடிகையாக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கினார்.

உயரத்தில் ஏற்றிய 16 வயதினிலே

உயரத்தில் ஏற்றிய 16 வயதினிலே

தொடர்ந்து ஸ்ரீதேவி 16 வயதினிலே, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழில் கோலோச்சத் தொடங்கினார். 16 வயதினிலே திரைபடத்தில் ஸ்ரீதேவி ஏற்று நடித்த மயிலு கதாபாத்திரம் படம் வெளிவந்து 38 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் பதிந்து நிற்கிறது.

ஹிந்தியில்

ஹிந்தியில்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி 1978 ம் ஆண்டு சொல்வா சவான் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

சூப்பர் ஸ்டாராக மாற்றிய ஹிம்மத்வாலா

சூப்பர் ஸ்டாராக மாற்றிய ஹிம்மத்வாலா

1983 ம் ஆண்டு ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளிவந்த ஹிம்மத்வாலா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது, விளைவு ஹிந்தி உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி மாறினார். தொடர்ந்து 15 வருடங்கள் பாலிவுட்டில் ஸ்ரீதேவியின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. 1997 ம் ஆண்டு ஜூடாய் திரைப்படத்துடன் தனது திரை வாழ்க்கையை முடித்துக் கொண்டார் ஸ்ரீதேவி.

இங்லீஷ் விங்லீஷ்

இங்லீஷ் விங்லீஷ்

15 வருடங்கள் கழித்து 2012 ம் ஆண்டில் இங்லீஷ் விங்லீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைவாழ்க்கைக்குத் திரும்பினார், படம் ஹிட்டடித்ததில் அம்மணி இப்போ ரொம்ப பிஸி.

புலியின் ராணியாக

புலியின் ராணியாக

தமிழில் நீண்ட.............இடைவேளைக்குப் பின் தற்போது விஜயின் புலி திரைப்படத்தில் ராணியாக நடித்திருக்கிறார் ராணியின் நடிப்பைக் பார்க்க தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது. சுருக்கமா சொன்னா வீ ஆர் வெய்ட்டிங்.

English summary
Actress Sridevi kapoor Today Celebrating Her 52nd Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil