»   »  ஸ்ரீதேவியின் ‘16 வயதினிலே’ ரகசியம் இதுதான்!

ஸ்ரீதேவியின் ‘16 வயதினிலே’ ரகசியம் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தன் வெற்றிக் கொடியை நாட்டிய நடிகை ஸ்ரீதேவி புலி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார். அதுவும் வித்தியாசமான வில்லியாக.

வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் குறையல என ஸ்ரீதேவியைப் பார்த்து சொன்னால் நிச்சயம் பொருந்தும். அந்தளவிற்கு இரண்டு டீன் ஏஜ் பெண்களின் தாய் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு அழகாக மிளிர்கிறார்.

ஸ்ரீதேவி என்றும் இளமையாக தோன்ற சில காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

நேரத்துக்குச் சாப்பாடு...

நேரத்துக்குச் சாப்பாடு...

நேரத்துக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுவாராம் ஸ்ரீதேவி. அதோடு கண்டதையும் சாப்பிடும் பழக்கம் கிடையவே கிடையாதாம்.

டிவி பார்த்துட்டே சாப்பிடக் கூடாது...

டிவி பார்த்துட்டே சாப்பிடக் கூடாது...

உணவு எடுத்துக் கொள்ளும் போது சாய்ஞ்சு உட்கார்ந்து காலை நீட்டிக்கிட்டு டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுகிற பழக்கம் ஸ்ரீதேவிக்கு கிடையாதாம். இதனால், அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.

அதிக எனர்ஜி...

அதிக எனர்ஜி...

நாள்முழுவதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாராம் ஸ்ரீதேவி. நாள் முழுக்க அதே எனர்ஜியுடம் செயல்படுவாராம்.

சந்தோஷம் ரொம்ப முக்கியம்...

சந்தோஷம் ரொம்ப முக்கியம்...

இது எல்லாவற்றையும் விட முக்கியமானது மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வாராம். இதெல்லாம் கூட தன் அழகின் ரகசியமாக இருக்கலாம் என்கிறார் ஸ்ரீதேவி.

பார்ட்டி?

பார்ட்டி?

அதுக்கெல்லாம் எங்கங்க நேரம் இருக்கு. மகள்களைப் பார்த்துக்கவே நேரம் போதலை.. இதுல பார்ட்டிக்கு எங்க போறது என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார் ஸ்ரீதேவி.

English summary
Actress Sridevi, who cameback to tamil industry through Vijay's Puli has revealed her secret of beauty.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil