»   »  பாகுபலி பத்தி இப்ப என்ன பேச்சு.. புலியைப் பத்தி மட்டும் கேளுங்க.. எரிச்சல் காட்டிய ஸ்ரீதேவி

பாகுபலி பத்தி இப்ப என்ன பேச்சு.. புலியைப் பத்தி மட்டும் கேளுங்க.. எரிச்சல் காட்டிய ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படம் வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. தியேட்டரிலிருந்தும் போய் விட்டது. இப்போது அதைப் பற்றி பேச என்ன உள்ளது. புலியைப் பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

புலி படம் தொடர்பாக தீவிர புரமோஷனில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீதேவி. தனது சமூக வலைதளப் பக்கங்களை புலி குறித்த செய்திகளைப் போட்டு அசத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் பாகுபலி குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது எரிச்சல் காட்டியுள்ளார் ஸ்ரீதேவி. இதற்குக் காரணம் உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் வேடத்தில்

ரம்யா கிருஷ்ணன் வேடத்தில்

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டரில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகினார் ராஜமெளலி. ஆனால் ரூ. 6 கோடி சம்பளம் தர வேண்டும் என்று ஸ்ரீதேவி கேட்டதால் அந்த வாய்ப்பு ரம்யாவுக்குப் போய் விட்டது.

பலி போனால் என்ன புலி இருக்கே

பலி போனால் என்ன புலி இருக்கே

இந்த நிலையில்தான் அவரைத் தேடி புலி பட வாய்ப்பு வந்தது. பாகுபலியில் தன்னை நிராகரித்த ராஜமெளலிக்கு சரியான பதிலடியை புலிமூலம் கொடுக்க திட்டமிட்ட ஸ்ரீதேவி இப்படத்தில் ஆர்வத்துடன் நடித்தார். இப்போது புரமோஷனிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதான் போயிருச்சே பிறகென்ன

அதான் போயிருச்சே பிறகென்ன

பாகுபலியில் நடிக்காமல் போனது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று செய்தியாளர்கள் ஸ்ரீதேவியிடம் கேட்டதற்கு, அப்படம் வந்தது, ஓடியது. இப்போது தியேட்டைரை விட்டும் போய் விட்டது. அது பற்றிப் பேசுவது தேவையற்றது. புலி பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் என்றார் ஸ்ரீதேவி.

புதுப் புதுப் கதைகளில் ஆர்வம்

புதுப் புதுப் கதைகளில் ஆர்வம்

மேலும் அவர் கூறுகையில், புதுப் புதுக் கதைகளைக் கேட்டு வருகிறேன். புலி படத்தில் எனக்கு அருமையான கேரக்டர். ரசித்து நடித்தேன். ராணியாக வருகிறேன்.

அசத்தல் ராணி

அசத்தல் ராணி

அந்த ராணி கேரக்டர் அருமையானது. அபாரமானது. அதை ஏன் நழுவ விட வேண்டும் என்று எண்ணியே நடிக்க ஒப்புக் கொண்டேன். இதை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்களது தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார் ஸ்ரீதேவி.

English summary
When Sridevi was quizzed why she had to put down Baahubali offer, during the promotions of Puli, she chose to skip the question. She has instead replied talking about her role in Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil