»   »  கவர்ச்சியை திணிக்கிறார்கள்: ஸ்ரீதேவி

கவர்ச்சியை திணிக்கிறார்கள்: ஸ்ரீதேவி

Subscribe to Oneindia Tamil
படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

தேவதையைக் கொண்டேன் படத்தின் வெற்றியையடுத்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவர் நடித்து ஓடிய மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த சந்தோஷம்.

இந் நிலையில் ஈரோட்டில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற ஸ்ரீதேவி பேசுகையில்,

பெரும்பான்மையான படங்களில் கதைக்குத் தேவைப்படி கவர்ச்சி காட்டப்படுகிறது. ஆனால் சில படங்களில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சியை திணித்து விடுகிறார்கள்.

தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு இணங்க இது நடப்பதால் அதை தவிர்க்க

முடியவில்லை.

தற்போது வெளிவரும் படங்களில் கவர்ச்சி அதிகமாக இருப்பதாக கூறமுடியாது.

கதைக்கு தேவைப்படும் அளவுக்கு நானும் எக்ஸ்போஸ் செய்து நடிக்கத் தயார் தான்.

மும்பை நடிகைகளைப் போல தமிழ் நடிகைகளால் புகழ் பெறமுடியவில்லை என்பதை ஏற்க முடியாது. அவர்களைப் போலவே நம்மவர்களுக்கும் திறமை இருக்கத்தான் செய்கிறது.

தமிழ் படத்திற்கு ஆங்கிலப் பெயர் வைக்கக்கூடாது என்று சில அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல. இதனால் பாதிப்பு சினிமாவுக்குத் தான்.

கதைக்கு ஏற்றபடி ஆங்கிலப் பெயர் வைப்பதில் தவறே இல்லை. இது என் தனிப்பட்ட கருத்து தான்.

தேவதையைக் கண்டேன் படத்தில் கடைசி காட்சியில் நான் ரசிகர்கள் வெறுக்கும்படி நடித்ததாக கூறுகிறார்கள். எந்த ஒரு கேரக்டர் என்றாலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தான் நான் அவ்வாறு நடித்தேன் என்றார் ஸ்ரீதேவி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil