»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கலையுலகக் குடும்பத்தின் சார்பில் கடைசி நம்பிக்கையாக களம் இறக்கிவிட்ட ஸ்ரீதேவிக்கு சான்ஸ்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.

காதல் வைரஸ் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், அதில் நடித்த விஜய்குமார்-மஞ்சுளா தம்பதியின் கடைசி வாரிசான ஸ்ரீதேவி சான்ஸ்களை குவிக்கஆரம்பித்துவிட்டார்.

இவருக்கு முன் வந்த இக் குடும்ப வாரிசுகள் எல்லோருமே வந்தவுடன் காணாமல் போனார்கள். ஆனால், ஸ்ரீதேவிதேறிவிடுவார் என்கிறார்கள்.

காதல் வைரஸ் வந்த வேகத்திலேயே ஏ.வி.எம். நிறுவனம் உள்பட முன்னணி தயாரிப்பாளர்கள் இவருக்கு கையில் அட்வான்ஸை திணித்துவிட்டனர்.

கவர்ச்சியைவிட மிக ஹோம்லியாக உள்ள இவரது முகம் தான் பெரிய பிளஸ் பாயிண்ட் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

விந்தியாவுக்கு அடித்த சான்ஸ்

விந்தியாவுக்கு அடித்திருக்கிறது லாட்டரி. அழகிருந்து தமிழில் இவருக்குப் போதிய வேடங்ள் கிடைக்கவில்லை. விவேக்குடன் ஜோடி, ஒரு பாட்டுக்குடான்ஸ் என்று சில்க் ஸ்மிதா ரேஞ்சில் கவர்ச்சி ஆட்டம் வைத்து நோகடித்தனர்.

வீட்டில் பெற்றோருடன் வேறு பிரச்சனை வந்ததால் மேஜேனருடன் தனிக் குடித்தனம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் விரக்தியில் இருந்தவிந்தியாவுக்கு வந்திருக்கிறது ஹீரோயின் சான்ஸ்.

மலையாளத்தில் இருந்து தான் இந்த அழைப்பு வந்திருக்கிறது. ஹீரோயின் சான்ஸ் உள்ளது. நடிக்க வருகிறீர்களா என்று கேட்டு போன் வந்தது தான் தாமதம்.உடனே பிளைட் பிடித்து திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்துவிட்டார் விந்தியா.

அங்கிருந்தபடி தொடர்ந்து பிற மலையாளப் படங்களிலும் சான்ஸ் தேட முடிவு செய்திருக்கிறாராம்.

ரவளியின் ஓவர் கவர்ச்சி

பாண்டியராஜனுடன் நடித்து வரும் அன்புத் தொல்லை படத்தில் கவர்ச்சியில் அனைவரையும் திக்குமுக்காடச் செய்து வருகிறாராம் ரவளி.கொஞ்சம் கவர்ச்சி காட்டச் சொன்னால், அவராகவே ஓவராக ஆடை குறைப்பு செய்கிறாராம். ஷகீலாவோடு போட்டி என்பதால்மிக ஓவராக அவர் காட்டும் கவர்ச்சியால் சூட்டிங் ஸ்பாட்டே சூடாகிப் போய்விடுகிறதாம். படம் ஏ சர்டிபிகேட் வாங்கப் போவதுஉறுதி என்கிறார்கள்.

சிம்ரனுக்கு நோஸ் கட் தரும் பவசராஜூ

டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் என்ற பசவராஜூ (இவரது ஒரிஜினல் கன்னடப் பெயர் இது தான்) மைசூரைச் சேர்ந்த நிஷ்சிதாஎன்ற பெண்ணைத் திருமணம் செய்யப் போவது தெரிந்த செய்தி தான். ஆனால், இதன் மூலம் என்னை கழற்றிவிட்ட மாஜி காதலிசிம்ரனுக்கு நோஸ் கட் கொடுப்பேன் என்று அவர் கூறி வருவது புதிய செய்தி. சிம்ரனுக்கு நிச்சயம் திருமண அழைப்பிதழ் தந்துவெறுப்பேற்றப் போவதாக கூறி வருகிறார்.

தமிழ் புத்தாண்டில் ரஜினி படம்

ரஜினியின் அடுத்த படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்கிறார்கள். சமீபத்தில் கதை தேடி பெங்களூர் வந்து சிலகன்னடப் படங்களைப் பார்த்தார். அப்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும் உடன் இருந்துள்ளார் என்று இப்போதுதெரியவந்துள்ளது. ஆக, ரஜினியின் அடுத்த படத்தை ரவிக்குமார் தான் இயக்க உள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil