»   »  கன்னடத்தை கலக்கும் ஸ்ரீதேவிகா

கன்னடத்தை கலக்கும் ஸ்ரீதேவிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் எடுபடாமல் போன ஸ்ரீதேவிகா இப்போது கன்னடத்தில் லீடிங் நாயகியாக பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

அன்பே வா படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஸ்ரீதேவிகா. அடுத்து ராமகிருஷ்ணா என்ற படத்தில் நடித்தார். இரு படங்களில் அடுத்தடுத்து நடித்தும் கூட ஸ்ரீதேவிகாவுக்கு தமிழ் திரையுலகம் கை கொடுக்கவில்லை.

எடுப்பும், துடிப்புமாக இருந்தும் கூட தமிழ்ப் படவுலகினரைக் கவரத் தவறி விட்டது தேவிகாவின் தப்பு அல்ல. தமிழ்த் திரையுலகம் நட்டாற்றில் விட்டு விட்டதால் ஆரம்பத்தில் கொஞ்சம் விசனமாகத்தான் இருந்தார் தேவிகா.

ஆனாலும் மனதைத் தேற்றிக் கொண்டு தெலுங்கிலும், கன்னடத்திலும் முயன்று பார்த்தார். அதில் கன்னடம் கிளிக் ஆகவே அங்கே போனார். இப்போது கன்னடத்தில் முன்னணி நடிகையாம் ஸ்ரீதேவிகா.

கை நிறையப் படங்களுடன் கன்னடத்தைக் கலக்கிக் கொண்டுள்ள தேவிகா, கிளாமரிலும், நடிப்பிலுமாக ஜொலித்து வருகிறார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு படு பிசியாம் அம்மணி.

இனிமேல் வேறு பக்கம் திரும்பிப் பார்க்கவே அவசியம் இல்லை என்ற ரேஞ்சில் படு வேகமாக கன்னடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தேவிகாவின் மனதில் தமிழுக்கு இன்னும் கொஞ்சம் போல இடம் உள்ளதாம். நல்ல வாய்ப்பு வந்தால் நிச்சயம் தமிழிலும் நடிப்பேன் என்கிறாராம்.

எங்கிருந்தாலும் வாழ்க

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil