»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழில் அடுத்தடுத்து கவர்ச்சிப் புயல்கள் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்க, குடும்பப் பாங்கானவேடங்களில் மட்டுமே நடிப்போம் என்று கூறிக் கொண்டு இரு பூக்கள் நுழைந்திருக்கின்றன.

ஒன்றின் பெயர் ஸ்ரீதேவிகா.. இன்னொன்று நந்தனா.

அகத்தியன் எடுத்து வரும் அடுத்த படம் ராமகிருஷ்ணா படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவிகா. சக்ஸஸ் என்ற படத்தில்நடிக்கிறார் நந்தனா.

ராமகிருஷ்ணாவைத் தயாரிப்பது காதல் கோட்டை படத்தைத் தயாரித்த சிவசக்தி பாண்டியன். இந்த இருவரின்காம்பினேஷனில் உருவாகும் இரண்டாவது படம் இது. காதல் கோட்டைக்குப் பின் அகத்தியன் எடுத்த படங்கள்பேசப்பட்டன, ஆனால் ஓடவில்லை.

இதனால் ராமகிருஷ்ணாவை பார்த்து, பார்த்து செதுக்கி வருகிறாராம் அகத்தியன். ஹீரோயினுக்காக அலையோஅலை என்று அலைந்திருக்கிறார்கள். குடும்பப் பாங்கான புதுமுகம் வேண்டும் என்று அத்தியன் கேட்க,கிட்டத்தட்ட நூறு பேரை அடுத்தடுத்து கொண்டு வந்து நிறுத்தினார் சிவசக்தி பாண்டியன்.

அதில் ஏகப்பட்டவர்களை கழித்துக் கட்டிவிட்டு கடைசியாக 12 பேரை தேர்வு செய்து அதில் ஒருவரைஹீரோயினாக தேர்வு செய்தார்களாம். அவர் தான் ஸ்ரீதேவிகா. கொஞ்சம் ஸ்னேகாவின் சாயலில் இருக்கிறார்.அநியாயத்துக்கு குடும்பப் பாங்காவே தெரிகிறார்.

அது என்ன ஸ்ரீதேவிகா?, பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நாம் தமிழில் கேட்க, மலையாளத்தில் பதில்வந்தது.

நான் கேரளப் பெண். என் உண்மையான பெயர் ஸ்ரீதேவி. அப்பா பெயரைச் சேர்ந்து ஸ்ரீதேவி பணிக்கர் என்றுதான் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்கள். ஆனால், தமிழில் நடிக்க சான்ஸ் கிடைத்தபோது இங்கே ஏகப்பட்டஸ்ரீதேவிகள் இருப்பதால் பெயரை மாற்றச் சொன்னார்கள். நாங்கள் கும்பிடும் குல தெய்வமான அனகா அம்மனின்பெயரைச் சேர்ந்து நான் தான் ஸ்ரீதேவிகா என்று பெயரை மாற்றினேன்.

ராமகிருஷ்ணா யூனிட்டுக்கு பெயர் பிடித்துப் போய்விட்டதால் அதையே வைத்துவிட்டார்கள். எவ்வளவு பணம்கொடுத்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்கிறார் ஸ்ரீதேவிகா.

இவர் இப்படி இருக்க நந்தனா பார்க்கவே கொள்ளை அழகுடன் நிற்கிறார். நடிகை ஊர்வசி இவருக்கு அத்தைமுறை வேண்டுமாம்.

சக்ஸஸ் படத்தில் கவர்ச்சிக்கு காதல் கொண்டேன் புகழ் சோனியாவைப் போட்டுவிட்டு, குடும்பப் பாங்கானகேரக்டருக்கு தேடிபோது சிக்கியவர் தான் இந்த நந்தனா. மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு தமிழுக்குவந்திருக்கிறார். கவர்ச்சி காட்ட என்னிடம் எல்லாம் இருக்கு. ஆனால், அதைச் செய்யவே மாட்டேன் என்கிறார்.இவரும் மலையாளத்தில் தான் பதில் சொன்னார்.

ஊர்வசி அத்தை மூலம் கிடைத்த சான்ஸாம் இது.

இருவருமே மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழில் ஒதுங்கியுள்ளவர்கள் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil