»   »  அன்பே வா.. ஸ்ரீதேவிகா

அன்பே வா.. ஸ்ரீதேவிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதல் படத்தில் அடங்கி ஒடுங்கி பழமாக நடித்த ஸ்ரீதேவிகா அடுத்த படங்களில் டகால் என்று கிளாமர் பக்கம் குதித்திருக்கிறார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவிகா பி.ஏ. படிப்பை பாதியில் விட்டுவிட்டு கோடம்பாக்கத்துக்கு குடியேறியவர்.

மிஸ் கேரளா 2003 பட்டம் வென்று, அடுத்ததாக மாடலிங் செய்ய முயன்று, ஒரு மலையாள பத்திரிக்கையின் அட்டையில் இவரதுபுகைப்பட வெளியாக, அது சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பாண்டியனின் கண்ணில் பட்டதால் தமிழில் ஹீரோயின்ஆனவர்.

காதல் கோட்டை அகத்தியனின் இயக்கத்தில் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக இவர் நடித்த ராமகிருஷ்ணா படம் படுதோல்வி.ஆனாலும் ஸ்ரீதேவிகா கோடம்பாக்கத்தினரை கவரத் தவறவில்லை.தனது செல்ல மலையாளத்தில் தயாரிப்பு பார்ட்டிகளை தனியாக சந்தித்து வாய்ப்பு கேட்கும்போது அவர்களால் மறுக்கமுடியவில்லை. இப்படியாக முதல் ரவுண்டு சந்திப்பிலேயே 2 படங்களை லவட்டிக் கொண்டு வந்துவிட்டார் இந்த சேச்சி.

மலையாளத்து சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸான நயனதாராவைப் பார்த்து நடுங்கி, இன்னொரு மலையாளத்து எக்ஸ்பிரஸானகோபிகாவே கவர்ச்சிப் பக்கமாய் நகர ஆரம்பித்துவிட, பானுமதி மாதிரி நடிப்பேன், ரேவதி மாதிரி நடிப்பேன் என்று வசனம்பேசிய ஸ்ரீ தேவிகா, தனது கட்டுப்பாடுகளை எல்லாம் கூட்ஸ் வண்டியில் ஏற்றிவிட்டுவிட்டு தாராளமயமாக்கலுக்குவித்திட்டிருக்கிறார்.

செந்தமிழ் கலைக்கூடம் தயாரிக்கும் அந்த நாள் ஞாபகம் என்ற படத்திலும் அன்பே வா (மீண்டும்!!) என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டிலும் ஸ்ரீதேவிகாவின் குஜால் நடிப்பு பற்றித்தான் ரொம்பவே பேசுகிறார்கள்.

அந்த நாள் ஞாபகத்தில் போட்டிக்கு தேஜாஸ்ரீயும் இருக்கவே, தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஜாரூராக இருக்கும்ஸ்ரீதேவிகா, கவர்ச்சி ஜமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

மணிபாரதி கதை, திரைக்கதை எழுதி வசனமும் எழுதி இயக்கும் படம் இது. இதில் வடிவேலு, ஜோக் என்ற பெயரில்கழுத்தறுக்கும் தலைவாசல் பிளேடு ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், மதன்பாப் ஆகியோரும் கே.ஆர். விஜயாவின்தங்கச்சி கே.ஆர்.வத்சலா, இந்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பரத்வாஜின் இசையில் கும்மாங்குத்து பாடல்களுக்கு ரமணாவுடன் ஸ்ரீதேவிகா போட்டுத் தாக்கியுள்ளாராம். மலேசியாவில்புத்ரஜெயா, கோலாலம்பூர், மலாக்கா, கெந்திங், பெரி பார்க், லங்காவி ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில்வஞ்சனை இல்லாமல் அழகை அள்ளிக் கொட்டிவிட்டிருக்கிறார் ஸ்ரீதேவிகா.

என்னங்க இரண்டாவது படத்துலேயே இப்படி ஆயிட்டிங்க என்று கேட்டால், கோலிவுடன் தோன்றிய காலத்தில் இருந்துநடிகைகள் பேசும் அதே வசனத்தை சொல்லிக் காட்டினார் ஸ்ரீதேவிகா.

கவர்ச்சிக்கு ஒரு அளவு கோல் உண்டு. நான் மாடர்ன் டிரஸ்சில் கவர்ச்சியாக வருவேன். ஆனால், ஆபாசமாக நடிக்கவே மாட்டேன்என்ற ஸ்ரீதேவிகாவிடம் படிப்பு அம்புட்டு தானா என்று கேட்டபோது,

என்னங்க பண்றது, படிப்புல எனக்கு ரொம்ப இஷ்டம். அப்படியே விட்டிருந்தால் (யாரு கூப்பிட்டா?) இங்கிலீசில் எம்.ஏ.முடித்துவிட்டு, அப்படியே ஆங்கில இலக்கியத்தில் எம்.பில் முடிச்சுட்டு, டீச்சிங் பக்கம் போயிருப்பேன் என்றார். (இவரதுஅக்காள் ஸ்ரீவித்யா ஒரு ஆங்கில பேராசிரியை)

ஸ்ரீதேவிகா குடும்பத்தினருக்கு கேரளாவில் மீன் பண்ணை உள்ளதாம். இரால், கெழுத்தி உள்பட பிரஷ் வாட்டர், சீ வாட்டர் பிஷ்வெரைட்டிகள் எல்லாம் வளர்க்கிறார்களாம். ஸ்ரீதேவிகாவுக்கும் மீன் வளர்ப்பதில் ரொம்ப ஆசையாம்.

ஒரு கெழுத்தி மீன்.. மீன் வளர்க்கிறது...

இதைச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டார் ஸ்ரீதேவிகா.

இவர் நடிக்கும் அன்பே வா படத்தை இயக்குவது செல்வபாரதி. விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே,வசீகரா ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஸ்ரீதேவிகாவுக்கு ஜோடியாக தென்றல் என்ற இளைய புதுமுகம் அறிமுகமாகிறார்.

கும்பகோணம், சென்னையில் சூட்டிங் முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கைக்குப் பறந்திருக்கிறது இந்தயூனிட். இதிலும் பாடல் காட்சிகளில் ஆவி பறக்க விட்டிருக்கிறாராம் ஸ்ரீதேவிகா.

அன்பே வா மற்றும் அந்த நாள் ஞாபகம் ஆகிய படங்களில் ஸ்ரீதேவிகாவின் தாராளத்தைக் கேள்விப்பட்ட தெலுங்குபார்ட்டிகளும் நேரில் வந்து பேசிவிட்டுப் போயிருக்கிறார்களாம். விரைவில் தெலுங்கிலும் ஸ்ரீதேவிகாவை மணவாடுகள்தரி(ர)சிக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil