»   »  சூரி நடிப்பைப் பார்த்து மெர்சலாயிட்டேன்!- ஸ்ரீதிவ்யா

சூரி நடிப்பைப் பார்த்து மெர்சலாயிட்டேன்!- ஸ்ரீதிவ்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மருது படத்தில் சூரியின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து நான் மெர்சலாயிட்டேன் என்றார் நடிகை ஸ்ரீதிவ்யா.

முத்தையா இயக்கியுள்ள மருது படத்தின் அறிமுக விழா மற்றும் பிரஸ்மீட் நேற்று பிரசாத் லேபில் நடந்தது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதாநாயகி ஸ்ரீதிவ்யா பேசுகையில், "மருது' படம் நடிக்கும் போதே எனக்குத் தெரிந்தது இது நிச்சமாக வெற்றிப்படமாக அமையும் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான் 'மெர்சலாயிட்டேன்.' படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக இது அமையும்," என்றார்.


Sridivya praises Soori act in Marudhu

படத்தின் இயக்குநர் முத்தையா பேசுகையில், "மருது' மண்மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் 'மருது'. எனக்கு சென்டிமெண்ட் படங்களைத்தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும் அதிலும் சென்டிமெண்ட் இருக்கும்.


'மருது' கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது.


படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. நடிகர் சூரி, அவர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்," என்றார்.

English summary
Actress Sridivya says that she was surprised over the acting skill of comedian Soori.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil