»   »  ச்சீ ச்சீ... தமிழ் புளிக்கும்... தெலுங்கு பக்கம் போன ஸ்ரீதிவ்யா!

ச்சீ ச்சீ... தமிழ் புளிக்கும்... தெலுங்கு பக்கம் போன ஸ்ரீதிவ்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊதா கலர் ரிப்பன் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. எனவே தாய்மொழியான தெலுங்கு பக்கமே நடிக்க சென்றுவிட்டாராம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இளம் நாயகர்களின் தேர்வாக இருந்தார். ஆள் வளராதது போலவே கேரியரும் வளராமலேயே காலியானது.

Sridivya returns to Telugu

ஸ்ரீதிவ்யாவுக்கு பின் வந்த கீர்த்தி சுரேஷ் போன்றோர் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை ஆக, ஸ்ரீதிவ்யாவைக் கண்டுகொள்ள ஆள் இல்லை. அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படம் மட்டுமே ஸ்ரீதிவ்யா கையில் இருக்கிறது. அதுவும் அப்படியே நிற்பதால் ஸ்ரீதிவ்யா இப்போது தனது சொந்த மொழியான தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துகிறாராம்.

தெலுங்கில் சின்ன படமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இறங்கியிருக்கிறாராம்.

English summary
After drying chances in Tamil, actress Sridivya is now seeking chances in her own language Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil