சிவகார்த்திகேயனின் ரெமோவில் ஸ்ரீதிவ்யாவும் உண்டு!
ஸ்ரீதிவ்யா அறிமுகமானதே சிவகார்த்திகேயன் ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்தான்.
அந்தப் படத்தின் அதிரடி வெற்றி அவரை இளம் நாயகர்களின் ஆஸ்தான ஹீரோயின் ஆக்கிவிட்டது. விஷால், விஷ்ணு, விக்ரம் பிரபு, ராணா ஆகியோருக்கு ஜோடி ஆனார். இடையில் சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை படத்திலும் இணைந்தார்.

இப்போது கார்த்தியுடன் காஷ்மோரா, ஜீவாவுடன் சங்கிலி பிங்கிலி கதவை தொற படங்களில் நடிக்கும் ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டதற்காக ரெமோ படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறாராம்.
அனேகமாக சிவகார்த்திகேயன் நர்ஸாக வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவராக வரலாம் என்கிறார்கள். கீர்த்திசுரேஷும் இதில் மருத்துவராகத்தான் நடிக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications