»   »  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கும் ஸ்ரீதிவ்யா?

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கும் ஸ்ரீதிவ்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ள நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவருடன் மீண்டும் ஜோடி போட காத்துக் கொண்டிருக்கிறாராம்.

கார்த்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் காஷ்மோரா. படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு நாயகிகள். இரண்டு நாயகிகள் இருந்தாலும் கார்த்தி யாரையும் காதலிக்கவில்லையாம்.

வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீதிவ்யா கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் சேர்ந்து முதல் முறையாக நடித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவை பார்த்து நான் மிரளவில்லை. அவர் பெரிய நடிகை என்று இல்லாமல் நட்புடன் பழகினார். அவர் மிகவும் அழகாக உள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தது ஒரேயொரு நாள் தான் என்கிறார் ஸ்ரீதிவ்யா.

சம்பளம்

சம்பளம்

நான் அதிக சம்பளம் எல்லாம் கேட்பது இல்லை. நான் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. யாரோ விஷமிகள் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா

சூர்யா

எனக்கு சூர்யா சாருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்று ஸ்ரீதிவ்யா கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் அவர் மீண்டும் சிவாவுடன் சேர்ந்து நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் ஸ்ரீதிவ்யா அபார வளர்ச்சி அடைந்துள்ள சிவகார்த்திகேயன், முன்னணி ஹீரோவான சூர்யாவுடன் நடித்தால் மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று திட்டமிடுகிறாராம்.

English summary
Sri Divya said that she is longing to act with Suriya. Varuthapadatha Valibar Sangam actress is expecting a chance to act again with Sivakarthikeyan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil