»   »  3 குழந்தைகளின் தாய், வித்தியாசமானவர்: 2 நடிகைகளை வறுத்தெடுத்த ஸ்ரீப்ரியா

3 குழந்தைகளின் தாய், வித்தியாசமானவர்: 2 நடிகைகளை வறுத்தெடுத்த ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 குழந்தைகளுக்கு தாய் என்றால் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தும் தகுதி உள்ளதா என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில் நடிகைகள் நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீப்ரியா. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்தும் நடிகைகள் பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

3 குழந்தைகள்

தனக்கு 3 குழந்தைகள் மற்றும் அனுபவம் உள்ளதால் பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்த தகுதி உள்ளது என நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.(மகாபாரதத்தில் வரும் 101 பிள்ளைகளின் தாயான காந்தாரியின் தகுதிகளை நினைத்து பாருங்கள்)

வா போ

நான் வித்தியாசமானவள், நான் வித்தியாசமாக சிந்திப்பவள். அதனால் பலர் என்னை மதிக்கிறார்கள் என மற்றொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் தெரிவித்துள்ளார். மக்களை வா போ என்று அழைப்பது வித்தியாசமா?

கட்டப்பஞ்சாயத்து நடிகை

கட்டப் பஞ்சாயத்து நடிகையின் ஆடியோ இன்டர்வியூ: பலமணிநேரம் கவுன்சிலிங் அளித்த அனுபவம் தனக்கு உள்ளது என்கிறார்..!!

மேடம்

ப்ரொபஷனல் கவுன்சிலிங் என்பது சம்பந்தப்பட்டவர் மற்றும் கவுன்சிலர் இடையே நடத்தப்படும், கேமராவுக்கு முன்பு நடத்தி உலகிற்கே தெரிவிப்பது இல்லை நிகழ்ச்சி தொகுப்பாளர் மேடம்.

English summary
Actress Sripriya has blasted two actresses who are hosting counselling shows on TV channels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil