»   »  ஹன்சிகாவை அவமானப்படுத்திய ஸ்ரீப்ரியா, ராதிகா!

ஹன்சிகாவை அவமானப்படுத்திய ஸ்ரீப்ரியா, ராதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழைய நடிகைகள், அதுவும் முன்னணியிலிருந்து ரிடையரான நடிகைகள் ஒன்றுகூடினால் அந்த மேடையில் நடக்கும் அலப்பரைகளும், ப்ளாஷ்பேக்குகிறேன் பேர்வழி என்று அடிக்கும் கூத்துகளுக்கும் அளவே இருக்காது.

நேற்றோ ஒன்றல்ல நான்கு முன்னாள் நாயகிகள், பழைய ஹீரோக்கள் என ஒன்றுகூடினார்கள், உயிரே உயிரே படத்தின் இசை வெளியீட்டுக்காக.

ராதிகா, ஸ்ரீப்ரியா, ஜெயப்ரதா, சுமலதா...

ராதிகா, ஸ்ரீப்ரியா, ஜெயப்ரதா, சுமலதா...

இவர்கள் கடைசி இருவரும் எந்தப் பிரச்சினையும் பண்ணவில்லை. சமர்த்தாக தங்கள் வேலையைப் பார்த்தார்கள்.

பொறாமை

பொறாமை

ஆனால் ராதிகாவும், ஸ்ரீப்ரியாவும் பேசியபோது அவர்களின் அலப்பறையும் அகம்பாவமும் தலைவிரித்தாடியது.

அதுவும் ஹன்சிகாவின் அழகை மேடையில் பேசிய அத்தனைப் பேரும் ஒகோவெனப் புகழ, அதைத் தாங்க முடியாமல் ராதிகாவும், ஸ்ரீப்ரியாவும் பேசிய விதம் அருவருக்க வைத்தது.

ஹன்சிகா அழகு

ஹன்சிகா அழகு

பாடலாசிரியர் விவேகா பேசும் போது, "நித்யா மேனனை நினைத்து எழுதாதீங்க.. ஹன்சிகாவை நினைத்து பாட்டெழுதுங்க", என இயக்குநர் கூறியதை நினைவுபடுத்தி, "இதுவரை பிறந்ததிலே இவள்தான் அழகி. உலகத்தின் மலர்களுக்கு இவள்தான் தலைவி," என்று எழுதியதைக் கூறினார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

உடனே மைக் பிடித்த ஸ்ரீப்ரியா, அதெப்படி நித்யா மேனனை அழகில்லை என்று நீங்கள் கூறலாம் என்று பிடித்துக் கொண்டார். கூடவே, ஹன்சிகாவுக்கு நிகரான அழகி, இணையற்ற திறமைசாலி நித்யா என கூறினார். அவரை வைத்து பாளையங்கோட்டை மாலினி என்ற ப்ளாப் படம் தந்ததற்கு நன்றிக் கடன் போலிருக்கிறது.

குடைபிடிச்சிருந்தா..

குடைபிடிச்சிருந்தா..

மேலும், 'நிறத்தில் என்ன இருக்கிறது.. அன்றைக்கு தயாரிப்பாளர்கள் எங்களுக்கும் குடைபிடித்திருந்தால் இப்படி கருத்திருக்க மாட்டோம்,' என்றார்.

ராதிகாவின் புலம்பல்

ராதிகாவின் புலம்பல்

இவருக்கு முன் பேசிய ராதிகாவும் கருப்பு, சிவப்பு, கலர் பற்றியே புலம்பிவிட்டு, போனா போகுது.. ஹன்சிகாவும் அழகிதான் என அரை மனசோடு கூறிவிட்டு, கூடவே தன் குடும்பப் பிரச்சினையை (அதாங்க நடிகர் சங்க மேட்டர்) 'நடிகர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பக் கூடாது.. சீனியர் நடிகர்களுக்கு மரியாதை இல்லை!' என்றெல்லாம் கூறிவிட்டு நகர்ந்தார்.

நெளிந்த ஹன்சி

நெளிந்த ஹன்சி

இந்த இருவரும் பேசப் பேச ஏன்டா இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம் என்கிற அளவுக்கு நெளிந்தார் ஹன்சிகா.

அந்த நிகழ்ச்சியிலேயே மிகச் சிறப்பாகப் பேசி கைத்தட்டல்களை அள்ளியவர் மோகன் பாபுதான்.

English summary
Radhika and Sripriya have insulted leading actress Hansika in Uyire Uyire audio launch on Saturday.
Please Wait while comments are loading...