»   »  மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே

மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

தர்மதுரை, அச்சமின்றி படங்களுக்குப் பிறகு சிருஷ்டி டாங்கே மீண்டும் பிஸியாகிவிட்டார்.

சமீபத்தில் அவரை சந்தித்தபோது, "நான் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று, நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருடம் குறைந்தது பத்துப் படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆயிடும்.

Srishti Dange happyover her career graph

இப்போ நான் இன்னும் சந்தோஷமாக இருக்கிறேன். மோகன்லால் நடிக்கிற படம் . மேஜர் ரவி டைரக்ஷன்னு சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது.

Srishti Dange happyover her career graph

மோகன்லால் படத்துல நடிக்கிறோம்ன்னு ஒப்பந்தமான உடனேயே எப்ப அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன். நடிக்க ஆரம்பிச்ச உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு.

'1971 - Beyond The Border' என்ற இந்தப் படம் எனக்கு மலையாளத்தில் முதல் படம். அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன். ராணுவம் சம்மந்தப் பட்ட கதை இது. நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன்.

Srishti Dange happyover her career graph

'1971 - Beyond The Border' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகுது.

2017 எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக அமையும்," என்கிறார் சந்தோஷமாக.

English summary
Srishti Dange is happy over her career graph after successful movies Dharmadurai and Achchamindri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil