»   »  காலில் பட்ட அடியுடன் “அச்சமின்றி” படத்தில் நடித்துக் கொடுத்த சிருஷ்டி டாங்கே

காலில் பட்ட அடியுடன் “அச்சமின்றி” படத்தில் நடித்துக் கொடுத்த சிருஷ்டி டாங்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் புதிதாக தயாராகி வருகின்ற அச்சமின்றி என்ற படத்தின் சண்டை காட்சியில் அடிபட்ட காலுடன் வலியை தாங்கிக்கொண்டு நடித்துள்ளார் நடிகை சிருஷ்டி டாங்கே.

"என்னமோ நடக்குது" படத்தை அடுத்து வி.வினோத்குமார் தயாரிக்கும் புதிய படத்துக்கு "அச்சமின்றி" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.


விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். ராஜபாண்டி படத்தினை இயக்கி வருகின்றார்.


பிரமாண்ட அரங்குகள்:

பிரமாண்ட அரங்குகள்:

அச்சமின்றி படத்துக்காக சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது.


மூன்று வில்லன்களாம்:

மூன்று வில்லன்களாம்:

பரத்ரெட்டி, சேரன்ராஜ், ஜெயகுமார் ஆகிய மூன்று வில்லன்களிடம் இருந்தும் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே ஆகிய இருவரும் தப்பிப்பது போன்ற காட்சி படமானது.


சிருஷ்டிக்கு காலில் பலத்த அடி:

சிருஷ்டிக்கு காலில் பலத்த அடி:

சண்டை காட்சியின்போது, சிருஷ்டி டாங்கே காலில் பலத்த அடிபட்டது. வலியை தாங்கிக்கொண்டு அவர் தொடர்ந்து அந்த காட்சியில் நடித்து முடித்தார்.


சமுத்திரக் கனிக்கு முக்கிய வேடம்:

சமுத்திரக் கனிக்கு முக்கிய வேடம்:

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மேலும், கருணாஸ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கும்கி அஸ்வின் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


English summary
Actress srushti dange continuously acted in a film scene with leg pain, director says.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil