'டி டே' படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு

By Mayura Akilan

இந்தியில் வெளியான 'டி டே' திரைப்படத்தை தமிழில் வெளியிட அப்படத்தின் கதாநாயகி ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது.

இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார்.

பாலியல் தொழிலாளியாக…

பாலியல் தொழிலாளியாக…

சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான 'ரா' அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதையில் பாலியல் தொழிலாளியாக சவாலான வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.

படு கவர்ச்சியாக...

படு கவர்ச்சியாக...

இப்படத்தில் கதாநாயகனுடன் படுக்கையில் ஸ்ருதிஹாசன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வேறு எந்த தமிழ் நடிகைகளும் இவ்வளவு நெருக்கமாக நடித்தது இல்லை

தமிழில் ‘டி டே’

தமிழில் ‘டி டே’

‘டி டே' திரைப்படத்தில் தமிழில் 'தாவூத்' என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது.

பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு

ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு

ஆனால் டி டே படம் தமிழில் வெளியாவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

ஊடகங்கள் ஒத்துழைப்பு

ஊடகங்கள் ஒத்துழைப்பு

இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த விவரங்கள் தயாரானவுடன் அது ஊடகங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இமேஜ் பாதிக்குமோ?

இமேஜ் பாதிக்குமோ?

தெலுங்கு, இந்தி படங்களில் படுகவர்ச்சியாக ஒத்துக்கொள்ளும் நடிகைகள், தமிழில் கொஞ்சம் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடிக்கின்றனர்.

டி டே படம் தமிழில் வெளியானால் தன்னுடைய இமேஜ் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்று அஞ்சுகிறாரோ ஸ்ருதிஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X