»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ருதிகாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம். மறுபக்கம் கவலையோ கவலை.

"ஆல்பம்" நாயகியான ஸ்ருதிகாவுக்கு தற்போது நிறையப் படங்கள் தொடர்ந்து "புக்" ஆகி வருவதால் ரொம்ப சந்தோஷமாக உள்ளார்.

"ஆல்ப"த்தில் இவரது நடிப்பு ரொம்பவே பேசப்பட்டதால் மளமளவென படங்கள் "புக்" ஆகி வருகிறதாம்.

இந்தச் சந்தோஷமே அவருக்குப் பெரும் கவலையை அளித்துக் கொண்டிருக்கிறது போலும். என்ன தலை சுற்றுகிறதா?

கை நிறையப் படங்கள் வருவதால் பள்ளிக் கூடத்திற்கு சரியாகப் போக முடியவில்லையாம் ஸ்ருதிகாவுக்கு.

தொடர்ந்து பள்ளிக்கு "டிமிக்கி" கொடுத்துக் கொண்டிருப்பதால் பள்ளி நிர்வாகம் ஸ்ருதிகாவை அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒழுங்காகபள்ளிக்கு வராவிட்டால் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது.

பாடங்களை எல்லாம் பிறகு படிச்சுக்கலாம், படங்களை ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று வீட்டில் உள்ளவர்கள் "சிறந்த" ஆலோசனைகூறியுள்ளனர்.

அவர்கள் கூறியதற்குத் தலையாட்டி விட்டு பள்ளிக்கு "டாடா" காட்டி விட்டாராம் ஸ்ருதிகா.

படங்களுக்காக படிப்பை விட வேண்டியதாகி விட்டதே என்ற கவலையாம் ஸ்ருதிகாவுக்கு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil