»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஸ்ருதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அத்தனை பேரையும் கவர்ந்து விடுகிறாராம்.

மறைந்த காமெடி நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, "ஸ்ரீ" படத்தில் கதாநாயகியாகஅறிமுகமானார்.

தனது அசத்தல் அழகால் மட்டும் ஸ்ருதிகா அனைவரையும் அசத்தவில்லை. பழகும் தன்மையும் அத்தனை பாங்காகஇருக்கிறதாம்.

தன்னுடன் யார் பேசினாலும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து, முடிந்தால் எழுந்து நின்று தான் பேசுகிறாராம்.தவறிக்கூட கோபப்படுவதில்லையாம்.

சிரிப்பதாகட்டும், பேசுவதாகட்டும், ஸ்ருதிகா ஒரு கவிதை .. கவிதை என்று ஸ்ருதிகாவுடன் பேசவும், பழகவும்வாய்ப்பு கிடைத்த பாக்கியவான்கள் புல்லரிப்புடன் கூறுகின்றனர்.

படத்திற்குத் தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவதில் தப்பே இல்லை என்று கூறும் ஸ்ருதிகா,தேங்காய் சீனிவாசனின்பேத்தி என்ற நிலையிலிருந்து ஸ்ருதிகாவின் தாத்தா தான் தேங்காய் சீனிவாசன் என்ற நிலையை ஏற்படுத்துவதேதனது லட்சியம் என்று கூறுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil