»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஸ்ருதிகா ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். கவர்ச்சியாக நடிக்க ரெடியாக இருந்தாலும் நீச்சல் உடை என்றால் கண்டிப்பாக "நோ" சொல்லிவிடுகிறாராம் ஸ்ருதிகா.

நடிப்புக்காக படிப்பையே தியாகம் செய்யும் அளவுக்கு கடமை உணர்ச்சியுடன் (?) கலைத் தாகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிகா, கதைக்குத் தேவைஎன்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்று கூறுகிறார்.

ஆனால் அதற்காக சிங்கிள் பீஸ், டூ பீஸ் கவர்ச்சியில் தனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார். நீச்சல் உடைக்கும் அவர் "நோ" சொல்கிறார்.

ரசிகர்களைக் கவரும் விதத்தில் கவர்ச்சி இருக்க வேண்டுமே தவிர அவர்களது காமத்தைத் தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என்று புதுத் தத்துவமும்கூறுகிறார்.

நடித்த இரண்டு படங்களும் சுமாராகவே ஓடியும் கூட, அதிக கவர்ச்சி காட்டுவதில்லை என்ற தனது நிலையில் ஸ்ருதிகா தெளிவாக இருப்பதால், தயாரிப்பாளர்கூட்டம் கொஞ்சம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil