»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

அந்த கால காமெடி நடிகரான மறைந்த தேங்காய் சீனிவாசனின் மகள் வயிற்றுப் பேத்தியான ஸ்ருதிகா நடித்த முதல் படமான ஸ்ரீ ஊத்திக்கொண்டாலும் கூட அவருக்கு நிறைய வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பூணைக் கண் அழகியான ஸ்ருதிகாவுக்கு நன்றாகப் பாடவும் தெரியுமாம். அத்தோடு முறைப்படி பரதநாட்டியம்கற்று வைத்துள்ளார்.

முதலில் நடிப்பதில் விருப்பமே இல்லாமல் இருந்திருக்கிறார். இவருடைய குடும்பத்தினரும் இவர் நடிப்பதைவிரும்பவில்லை. ஆனால் டைரக்டர் புஷ்பவாசகன் தொடர்ந்து நச்சரிக்கவே சூர்யாவுடன் சேர்ந்து ஸ்ரீ படத்தில்நடிக்க அனுமதித்திருக்கிறார்கள்.

ஸ்ரீ படத்தின் ரிலீசுக்கு முன்பே ஸ்ருதிகாவுக்கு பாலசந்தரிடம் இருந்து வாய்ப்பு கிடைத்துவிட்டது. பாலச்சந்தரின்தயாரிப்பில் உருவாகும் ஆல்பம் படத்தில் ஸ்ருதிகா நடித்து வருகிறார். இப்போது ஸ்ரீ ஊத்திக் கொண்டாலும் கூடநிறைய வாய்ப்புக்கள் இவரது வீட்டுக் கதவைத் தட்டுகின்றன.

இருப்பினும் நில்ல ரோல் உள்ள படங்களை மட்டுமே ஸ்ருதிகா ஒப்புக் கொள்கிறாராம்.

அலட்டல் இல்லாமல் இருப்பது, அமைதியாக பேசுவது, நன்றாகப் பழகுவது போன்ற நல்ல செயல்களால்கோலிவுட்டில் நல்ல பிள்ளை என்ற பெயரையும் ஸ்ருதிகா வாங்கிவிட்டார்.

Please Wait while comments are loading...