»   »  கழுத்தில் தாலி ஏறும் முன்பே கர்ப்பமான நடிகைகள்

கழுத்தில் தாலி ஏறும் முன்பே கர்ப்பமான நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா உள்ளிட்டோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார்கள்.

பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் உள்பட நடிகைகள் சரிகா, கொங்கனா சென், செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகினர்.

கர்ப்பமான கையோடு அவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் ஸ்ரீதேவி தான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை ஒப்புக் கொண்டவர்.

 கர்ப்பம்

கர்ப்பம்

நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் செட்டிலானபோது தயாரிப்பாளர் போனி கபூருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். அதன் பிறகு போனியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் ஜான்வியை பெற்றெடுத்தார் ஸ்ரீதேவி.

சரிகா

சரிகா

கமல் ஹாஸன் தனது முதல் மனைவி வாணி கணபதியை பிரிந்த பிறகு இந்தி நடிகை சரிகா தாகூருடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு முன்பே சரிகா கர்ப்பமாகி ஸ்ருதியை பெற்றெடுத்தார். ஸ்ருதி பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து கமல் சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.

கொங்கனா சென்

கொங்கனா சென்

பாலிவுட் நடிகை கொங்கனா சென் நடிகர் ரன்வீர் ஷோரேவை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமானார். திருமணம் ஆன ஆறு மாதங்களில் ஹாரூன் என்ற மகனை பெற்றெடுத்தார். தற்போது கொங்கனாவும், ரன்வீரும் விவாகரத்து பெறுகிறார்கள்.

செலினா ஜெட்லி

செலினா ஜெட்லி

இந்தி நடிகை செலினா ஜெட்லி தான் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகவில்லை என்று தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் பீட்டர் ஹாகை அவர் மணந்தார். இதையடுத்து 2012ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அம்ரிதா அரோரா

அம்ரிதா அரோரா

நடிகை கரீனா கபூரின் நெருங்கிய தோழியான நடிகை அம்ரிதா அரோரா அவசர அவசரமாக திருமண அறிவிப்பை வெளியிட்டார். அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் தான் அந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்பட்டது.

English summary
Bollywood actresses including Sri Devi became pregnant before marriage. Sri Devi alone accepted that she was pregnant before marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil