twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் விமானங்கள் ரத்து.. அமெரிக்காவில் சிக்கிக் கொண்ட இளம் நடிகை.. மத்திய அரசு உதவ கோரிக்கை!

    By
    |

    சென்னை: அமெரிக்காவில் சிக்கியுள்ள பிரபல நடிகை, இந்திய தூதரகம் உதவவில்லை என்றும் நாடு திரும்ப மத்திய அரசு உதவவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்துக்காக சில பட விழாக்களில் அறிமுக நடிகை விருதை வாங்கினார்.

    பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

    சூப்பர் ஸ்டார் நடிகரை இயக்கப்போகும் பாகுபலி இயக்குநர்.. கன்ஃபார்ம் ஆனதால் குதூகலத்தில் ரசிகர்கள்!சூப்பர் ஸ்டார் நடிகரை இயக்கப்போகும் பாகுபலி இயக்குநர்.. கன்ஃபார்ம் ஆனதால் குதூகலத்தில் ரசிகர்கள்!

    பிலிம் அகாடமி

    பிலிம் அகாடமி

    மஸ்டர்ட் அண்ட் ரெட் என்று தனது நிறுவனத்துக்கு பெயர் வைத்துள்ள இவர், இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமியில் நடக்கும் ஒர்க்‌ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.

    அதிகரித்து வருகிறது

    அதிகரித்து வருகிறது

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கோரிக்கை

    கோரிக்கை

    அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கியுள்ள நடிகை சவுந்தர்யா, மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 'சுமார் 400 மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது.

    Recommended Video

    அடுத்த 20 நாட்கள் ரொம்ப முக்கியம்.. கொரோனாவில் இருந்து தப்பிக்க.. விவேக் சொல்லும் ஆசமான ஐடியா!
    இந்திய தூதரகம்

    இந்திய தூதரகம்

    ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம். சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப விமானத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Soundarya Sharma, who is stranded in Los Angeles, has sent an SOS message to the ministry of external affair
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X