»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மச்சி என்ற படத்தில் அறிமுகமாகிறார் பெங்களூர் மாடலான சுபா புன்ஜா.

சக்ஸஸ் என்ற பெரும் தோல்விப் படத்தின் ஹீரோவான ஜூனியர் சிவாஜி என்ற துஷ்யந்த் தான் இதில் ஹீரோ. படத்தைத்தயாரிப்பது திருடா திருடி படத்தை எடுத்த கிருஷ்ணகாந்த். இந்தப் படத்துக்கு ஹீரோயின் வேட்டை பெங்களூரிலும்சென்னையிலும் நடந்து கடைசியாக தேர்வானவர் தான் சுபா.

கர்நாடகத்தில் மங்களூரில் பிறந்த இவர் பெங்களூரில் செட்டில் ஆனாலும் சென்னையிலும் சில காலம் இருந்திருக்கிறார். எங்கேமாடலிங் போட்டி நடந்தாலும் போய் பஙகேற்பாராம். அப்படித்தான் சென்னையில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் பங்கேற்றுடாப்மாடல்-2003 என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவது யார் தெரியுமா?. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கையான ஏ.ஆர். ரெஹைனாதான். இது அவரது முதல் முயற்சி என்றாலும் இசையில் அண்ணனுக்கு ஏற்கனவே உதவிய அனுபவம் கைகொடுக்கும் என்கிறார்.

மச்சி படத்துக்கு இவர் நல்ல மெட்டுக்கள் போட்டுத் தந்துள்ளதாக சொல்கிறார்கள். டியூன்களுக்கு நன்றாக ஆட்டம்போடுகிறாராம் சுபா.

இதில் விருமாண்டிவில்லன் பசுபதி. சுலோச்சனா, கீர்த்தனா என பெரும் பட்டாளம் நடிக்கிறது. அம்மா, பிள்ளை, நண்பன்உறவுகளை மையமாகக் கொண்ட படமாம்.

கதை நடப்பது கோவையில் என்பதால் சூட்டிங்கும் அந்தப் பகுதியிலேயே பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால்எல்லா கேரக்டர்களும் கோவைத் தமிழில் கஷ்டப்பட்டு பேச, சுபாவுக்குத் தான் பிரச்சனையே இல்லை. கொங்கு தமிழில் பின்னிஎடுக்கிறாரா? என்று கேட்காதீர்கள்.

சென்னையில் சில காலம் இருந்திருந்தாலும் தமிழை வாயாலேயே உடைத்து சுக்குநூறாக்குகிறார். இதனால் சூட்டிங்கில் வாய்அசைப்பதோடு இவருக்கு ஜோலி முடிந்தது. எல்லாம் டப்பிங்கில் பார்த்துக் கொள்வார்களாம். படத்தில் சுபாவின் வேலை முடிந்தவரை கவர்ச்சியில் ஜொலிப்பது. அதை அவர் தெளிவாகவே செய்கிறாராம்.

இந்தப் படத்தில் ஒரு நல்ல முயற்சியும் நடந்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ஒருரவுண்டு நடிப்புப் பயிற்சி தரப்பட்டு பின்னர் தான் சூட்டிங்குக்கு போயிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil