Don't Miss!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கேட்டீங்களா..!!
- News
முதலமைச்சரின் முதல் கள ஆய்வே 'தெறி'! 24 மணி நேரத்திற்குள் கலெக்டர் டிரான்ஸ்ஃபர்! அதிரடி பின்னணி!
- Sports
இந்தியா மீது குவியும் பிட்ச் குற்றச்சாட்டுக்கள்.. அஸ்வின் தரமான பதிலடி.. அட இது நல்லா இருக்கே!
- Lifestyle
உங்க குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை தவறாமல் சாப்பிட கொடுக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- Automobiles
புதிய டாடா எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்! டெலிவரி தொடங்கியது!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“நெஞ்சத்தைக் கிள்ளாதே“ அரிய புகைப்படத்தை பகிர்ந்தார் சுகாசினி!
சென்னை : திரைப்படங்களில் எதார்த்தமான கதைக்களத்தைக் கொண்டு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட முக்கியமான இயக்குனர்களில் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர்.
1980ஆம் ஆண்டு வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் கிட்டத்தட்ட ஓராண்டைக் கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்பட போஸ்டருக்காக எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகை சுகாசினி நினைவுகூர்ந்து இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

மகேந்திரன் இயக்கத்தில்
தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை இன்றளவும் கவர்ந்து வரும் நடிகை சுகாசினி 1980இல் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

மூன்று தேசிய விருது
மோகன், பிரதாப் போத்தன், சரத்பாபு என பிரபலமான பல நடிகர்கள் இதில் நடித்திருக்க, மோகன் முழு நீள நாயகனாக நடித்திருந்தார். இருவருடன் காதல் மற்றொருவருடன் கல்யாணம் என ஒரு பெண்ணின் இரண்டு இக்கட்டான சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு உருவாகின இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு கிட்டத்தட்ட ஓராண்டை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடி பல வசூல் சாதனைகளை செய்ததோடு மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

பல மொழிகளில்
முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சுகாசினி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்க, இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தும் ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் வந்தார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
இந்நிலையில் 40 ஆண்டுகளை கடந்தும் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்து வரும் நிலையில் சுகாசினி நெஞ்சத்தைக்கிள்ளாதே திரைப்படத்தின் போஸ்டருக்காக அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது நெஞ்சத்தைக் கிள்ளாதே பட ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்ததோடு இப்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது,