»   »  அய்யாவழி சுஜிபாலா

அய்யாவழி சுஜிபாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் மரியாதையில் ராதா நடித்தது போல, அய்யாவழி படத்தில் பிளவுஸ் அணியாமல் நடிக்கிறாராம் சுஜி பாலா.

நடிப்புக்காக மொட்டை போடுவதும், தாடி வைப்பதும், கோவணம் கட்டுவதும் நடிகர்கள் ஸ்டைல்.

ஆனால் நடிகைகளுக்கு அதுபோல விதம் விதமாக திறமை காட்ட தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவு. அதிகம் போனால் பிளவுஸ் போடாமல் நடிப்பார்கள் அல்லது ஆக்ஷன் நாயகிகளாக அசத்துவார்கள்.

முதல் மரியாதையில் ராதா, பிளவுஸ் போடாமல் நடித்து அசத்தினார். அதன் பிறகு அப்படித் துணிச்சலாக நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை. இப்போது ராதா இடத்திற்கு சுஜி பாலா வந்துள்ளார்.

அய்யாவழி என்ற பெயரில் தயாராகும் படத்தில் பிளவுஸ் போடாமல் நடிக்கிறாராம் சுஜிபாலா. இப்படத்தில் சலவைக்காரப் பெண்ணாக வருகிறார் சுஜி.

18வது நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் வாழ்ந்தவர் வைகுண்டசாமி. மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாக அக்காலத்தில் திகழ்ந்தவர். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள், அநியாயங்களைத் தட்டிக் கேட்டுப் போராடியவர்.

கிட்டத்தட்ட 175 ஆண்டுகளுக்கு முன்பு குமரி பகுதியை ஆட்சி செய்து வந்த குறு நில மன்னன், பெண்களின் மார்புக்கும், ஆண்களின் மீசைக்கும் வரி போட்டு மக்களை இம்சித்தான்.

அவனது அநியாயச் செயலை தட்டிக் கேட்க யாருக்கும் துணிவில்லை. ஆனால் வைகுண்டசாமிதான் அதைத் தட்டிக் கேட்டார்.

அந்தக் காலத்தில் வைகுண்டசாமி செய்த செயல்களால் கவரப்பட்ட பலர் அவரை அய்யா என மரியாதையுடனும், அன்புடனும் அழைத்து தனிப் பிரிவாக செயல்படத் தொடங்கினர். தங்களது மார்க்கத்திற்கு அய்யா வழி என்றும் பெயரிட்டுக் கொண்டனர்.

தங்களை மற்றவர்களிடமிருந்து அடையாளம் காட்டுவதற்காக தலையில் சிவப்பு நிற டர்பன் அணிந்து கொள்கின்றனர். அய்யா வைகுண்டசாமிக்கு ஏராளமான கோவில்கள் கட்டி வழிபடுகின்றனர்.

காமராஜர் பட இயக்குநர் பி.சி.அன்பழகன், அய்யா வைகுண்டசாமியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடிவு செய்தார். அதுவே அய்யாவழியாக படமாகிறது.

ராஜா என்ற புதுமுகம் இப்படத்தில் வைகுண்டர் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் சுஜி பாலா. படம் அந்தக் காலக் கதைப் பின்னணி கொண்டது என்பதால் படத்தின் பெரும்பாலான இடங்களில் சுஜி பாலா பிளவுஸ் இல்லாமல்தான் வருகிறாராம். அதேபோல அவருக்கு மேக்கப்பும் குறைவாம்.

படத்தின் திரைக்கதை அமைப்பில் எழுத்தாளர் பொன்னீலன் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

சுஜிபாலா பிளவுஸைத் துறந்தது பெரிதல்ல, நடிப்பை திறந்து விட வேண்டும், அதுதான் முக்கியம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil