»   »  சுஜிதா திடீர் கல்யாணம்

சுஜிதா திடீர் கல்யாணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

விளம்பரப் பட இயக்குநர் தனுஷுக்கும், நடிகை சுஜிதாவுக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடந்தது.

மலையாளத்தைச் சேர்ந்த நடிகை சுஜிதா சிறு வயதிலேயே நடிக்க வந்தவர். முந்தானை முடிச்சுப் படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வந்ததே ஒரு குட்டிப் பாப்பா, அதுதான் சுஜிதா.

அதன் பிறகு ஏராளமான படங்களில் குழந்தை நடிகையாக நடித்துள்ள சுஜிதா, காற்றுக்கென்ன வேலி, ஜதி ஆகிய படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். வாலி படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்தார்.

சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களில் அதிகம் நடித்து வந்தார். இவரது அண்ணன் மாஸ்டர் சுரேஷ். இவர் சூரியகிரண் என்ற பெயரில் தெலுங்கில் இயக்குநராக உள்ளார். இவரை இன்னொரு மலையாள நடிகையான காவேரி மணந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சுஜிதாவுக்கும், ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ளவருமான தனுஷுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும்.

இவர்களின் திருமணம் பொள்ளாச்சியில் நடந்தது. இரு வீட்டார், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு சென்னையில் வருகிற நவம்பர் 11ம் தேதி பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil