»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகை சுகன்யா அமெரிக்க என்ஜீனியரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இனி அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடவும் அவர்தீர்மானித்துள்ளார்.

புதுநெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான சுகன்யா தனது மூக்கழகு மற்றும் பிற அழகுகளால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். குறைந்தகாலத்தில் அதிக படங்களில் நடித்து தமிழ் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். நல்ல நடிகை என்ற பெயர் பெற்றவர், சிறந்தபரதநாட்டிய டான்சான சுகன்யா கலாசேத்ரா மாணவி.

புதுநெல்லு புது நாத்து, சின்னக் கவுண்டர், வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிச்சாமி, இந்தியன் ஆகிய படங்கள் சுகன்யாவின்நடிப்புத்திறமைக்கு சில சாம்பிள்கள். இதில் இந்தியனில் பாட்டியாக நடித்திருந்தார்.

புகழின் உச்சியில் இருந்த சுகன்யா, திடீரென வதந்திகளில் சிக்கினார். முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மனதைக் கவர்ந்தசுகன்யா அவரையே திருமணம் செய்து கொண்டு விட்டதாக செய்திகள் வந்தன. கண்ணப்பன் ஏகப்பட்ட பணத்தை இவரிடம்கொட்டியதாகவும் கூறப்பட்டது. இந்த செய்திகளுக்குப் பிறகு சுகன்யாவின் பட வாய்ப்புகள் நின்று போயின. டிவி தொடர்களில் நடிக்கஆரம்பித்தார்.

கடைசியாக பன்னாரி அம்மன் என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இந்த சூழ்நிலையில் சுகன்யாவின், அமெரிக்கஅக்கா, அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். அதற்கு சுகன்யாவும் சம்மதம் தெரிவித்தா.

ஸ்ரீதர் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் மாப்பிள்ளை சரியாக வரவே அவரை சுகன்யாவுக்கு நிச்சயம் செய்தனர். கடந்த மார்ச் மாதம் 18ம்தேதி நியூஜெர்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமணம் எளிமையாக நடந்தது.

சுகன்யா இனி இந்தியா திரும்புவதாக உத்தேசம் இல்லையாம். அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடப் போகிறாராம். பத்மினி போல,அமெரிக்காவில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறுமிகள், இளம் பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கப் போகிறாராம்.

படங்களில் நடிப்பதற்கும் டாட்டா சொல்லி விட்டாராம்.

எங்கிருந்தாலும் வாழ்க....

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil