»   »  அது செக்ஸ் காமெடி இல்லை.. "செக்ஸி... காமெடி":.. விளக்கம் தரும் சன்னி

அது செக்ஸ் காமெடி இல்லை.. "செக்ஸி... காமெடி":.. விளக்கம் தரும் சன்னி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்னி லியோன்.. நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் செக்ஸ் சைரன்... பாலிவுட்டை தனது கவர்ச்சியால் பதம் பார்த்து வரும் சன்னி, அடுத்து ராம் கபூருடன் இணைந்து ‘குச் குச் லோச்சா ஹை' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் செக்ஸ் கலந்த காமெடி படம் என்கிறார்கள். ஆனால் சன்னியோ, அல்ல அல்ல.. அது செக்ஸியான காமெடி என்று அழுத்தம் திருத்தமாக கூறி கண்ணடித்துப் புன்னகைக்கிறார்.

கோடையில் ரிலீஸ்

கோடையில் ரிலீஸ்

தேவங் தோலக்கியா இயக்கியுள்ள இந்தப் படத்தில் டெல்லியைச் சேர்ந்த நவதீப் சப்ரா ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி போடுகிறார் எவலின் சர்மா. மே 8ஆம் தேதி கொளுத்தும் கோடை வெயிலை கூல் ஆக்கும் வகையில் இந்தப் படம் திரைக்கு வருகிறதாம்.

செக்ஸி காமெடி

செக்ஸி காமெடி

இந்தப் படம் குறித்து சன்னி கூறுகையில் இது செக்ஸி காமெடி. செக்ஸ் காமெடிக்கும், செக்ஸி காமெடிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. படம் பார்த்தால் தெரியும் என்றார்.

எல்லோருக்கும் பிடிக்கும்

எல்லோருக்கும் பிடிக்கும்

இயக்குநர் தேவங் கூறுகையில், படத்தில் வரும் காமெடிக் காட்சிகள் அனைத்து வயதினரையும் குறி வைத்து தீட்டப்பட்டுள்ளது. அனைவருக்கும் இது பிடிக்கும் என்றார்.

செம்ம படம்

செம்ம படம்

படம் பட்டையைக் கிளப்பும் வகையில் வந்திருப்பதாக தயாரிப்பாளர் முகேஷ் புரோஹித் கூறுகிறார். ரசிகர்கள் படத்தை செமையாக ரசிப்பார்கள் என்றும் சர்ட்டிபிகேட் தருகிறார்..

ஏழு பாட்டும் சூப்பராம்

ஏழு பாட்டும் சூப்பராம்

படத்தில் 7 பாட்டாம். ஏழையுமே தனி ஆல்பமாக வெளியிட்டுள்ளனராம். இப்பவே இப்படி பரபரக்க வைக்கிறார்களே.. படம் வந்ததும் சன்னி என்னவெல்லாம் செய்து ரசிகர்களை ரகளை செய்யப் போகிறாரோ என்று பாலிவுட்டில் பயந்து போய் இருக்கிறார்கள்.

English summary
Sunny Leone and Ram Kapoor are all set to tickle the audience's funny bone with their comic caper Kuch Kuch Locha Hai. The Devang Dholakia-directed film also marks the debut of Delhi boy Navdeep Chhabra, who is paired with Evelyn Sharma. Presented by Alumbra Entertainment & Media Pvt Ltd, the movie opens in cinemas on May 8

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil