»   »  கபடிப் போட்டியில்.. ஜன கன மன பாடி அசத்திய சன்னி லியோன்!

கபடிப் போட்டியில்.. ஜன கன மன பாடி அசத்திய சன்னி லியோன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கபடி லீக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடி அசத்தியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து ஐபிஎல் பாணியில் கபடி போட்டித்தொடரை நடத்தி வருகின்றன. அதன்படி, நான்காம் ஆண்டு ப்ரோ கபடி தொடரின் நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் தான் சன்னி லியோன் தேசிய கீதம் பாடியுள்ளார்.

பாலிவுட் நடிகை...

பாலிவுட் நடிகை...

நீலப்பட நடிகையாக பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடினார் இவர்.

தேசிய கீதம்...

தேசிய கீதம்...

தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி மீடியாக்களில் அடிபடுவது இவருக்கு வழக்கமான ஒன்று தான். அந்தவகையில், இவரை ப்ரோ கபடி தொடரின் துவக்கவிழாவில் தேசிய கீதம் பாட வைத்து வித்தியாசமான முறையில் விளம்பரம் தேட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர்.

தீவிர பயிற்சி...

தீவிர பயிற்சி...

அதன் தொடர்ச்சியாக, தேசிய கீதத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் பாட தீவிர பயிற்சி மேற்கொண்டார் சன்னி லியோன். பயிற்சியின் பலனாக விழாவில் தன் இனிய குரலில் தேசிய கீதத்தைப் பாடி பார்வையாளர்களை அவர் அசத்தியுள்ளார்.

நன்றி...

நன்றி...

இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சன்னி லியோன், இதற்காக பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய தன் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அமிதாப்...

ஏற்கனவே, இந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் தனது சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leone is the latest to join the bandwagon of actresses, turning to singing, after she sang the national anthem at a Pro Kabaddi league match here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil