»   »  "பப்"பில் வைத்து நடிகருக்கு ஓங்கி ஆறு "அப்பு" விட்ட சன்னி லியோன்!

"பப்"பில் வைத்து நடிகருக்கு ஓங்கி ஆறு "அப்பு" விட்ட சன்னி லியோன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை சன்னி லியோன் சக நடிகரை கன்னத்தில் அறைந்து காயப்படுத்தியுள்ளார். ஆனால் நிஜத்தில் அல்ல, படத்திற்காக.

சன்னி லியோன் ராஜீவ் சவுத்ரி என்பவரின் இயக்கத்தில் நடித்து வரும் இந்தி படம் பீமான் லவ். அந்த படத்தில் பப் ஒன்றில் சன்னி தனது சக நடிகர் ரஜ்னீஷ் டுக்கலை கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும்.

அந்த காட்சியை படமாக்குகையில் சன்னி ரஜ்னீஷை அறைந்தது இயக்குனருக்கு திருப்தி இல்லையாம். இதையடுத்து சன்னி 6 டேக்குகள் வாங்கி ரஜ்னீஷை அறைந்து அந்த காட்சியை ஓகே செய்துள்ளார்.

Sunny Leone slaps co-star at a pub

காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக ரஜ்னீஷும் ஆறு முறை அறை வாங்கியும் அமைதியாக இருந்துள்ளார். ஆறு முறை அறை வாங்கியபோது ரஜ்னீஷின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த சன்னி கண்ணில் தண்ணீர் வைத்துக் கொண்டு ரஜ்னீஷிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பரவாயில்லை நீங்க என்ன வேண்டும் என்றா அறைந்தீர்கள், படத்திற்காகத் தானே என்று ரஜ்னீஷ் அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

English summary
Sunny Leone, slapped her co-star, Rajneesh Duggal six times inside a pub as the scene in her upcoming film, Beiimaan Love, demanded her to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil