»   »  சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் படமாகிறது

சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் படமாகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் ஆபாசப்பட நடிகையும் தற்போதைய பாலிவுட் பட நாயகியுமான சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

பின்லேடன் பட இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். சன்னி லியோனின் கணவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக உருவாக்குவது தற்போது டிரெண்டாக உள்ளது. கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில்,சன்னி லியோனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

போர்ன் பட நாயகி

போர்ன் பட நாயகி

அமெரிக்காவில் பிரபல ஆபாச பட நடிகையாக கொடி கட்டி பறந்து,அந்த திரையுலகை விட்டு வெளியேறி,தற்போது பாலிவுட்டில் பிரபலமாகியது வரையிலான சன்னி லியோனின் வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட உள்ளது.

சன்னி லியோன்

சன்னி லியோன்

இந்த திரைப்படத்தில் சன்னி லியோனின் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க உள்ளார்.சன்னி லியோனின் கணவரான டேனியல் வெபர்,படத்திலும் கணவராகவே நடிக்க உள்ளார்.

கணவரின் தயாரிக்கும் படம்

கணவரின் தயாரிக்கும் படம்

இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மா இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் 'தேரே பின் லேடன்' படத்தை இயக்கி பிரபலமானவர். இந்த படத்தை சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலமான நடிகை

பிரபலமான நடிகை

இந்திய-கனடிய பெற்றோருக்குப் பிறந்தவர் சன்னி லியோன் பிக் பாஸ் 5 சீசனில் பங்கேற்க இந்தயா வந்தவர். இந்திய அளவில் மோடிக்குப் பிறகு கூகுள் தேடுதலில் அதிகமாக தேடப்படும் நபராக சன்னி லியோன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leone is going to have a biopic made on her life's story, which will scale her love story with husband Daniel Weber, her move from being an adult movies' star to a leading lady in Bollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil