»   »  ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... அதிகம் விரும்பப்படும் சன்னி!

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... அதிகம் விரும்பப்படும் சன்னி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2014ம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட, நேசிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். டைம்ஸ் நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பின் மூலம் சன்னியை இவ்வாறு தேர்ந்தெடுத்துள்ளனர்.

போட்டியில் 50 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களை 20.3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். இதில் சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சென்னை எஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்பட நிறுவனமும், டைம்ஸும் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தன.

பாலிவுட்டை தனது கவர்ச்சியால் கலக்கி வரும் இந்த முன்னாள் பலான படை நடிகை தன்னை முதலிடத்திற்குத் தேர்வு செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய வெற்றி

மிகப் பெரிய வெற்றி

இதுகுறித்து சன்னி கூறுகையில் இது போன்ற வெற்றிகள் மகத்தானவை. சிலருக்கு இந்த இடத்தில் நான் வந்தது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பலருக்கு என்னைப் பிடித்ததால்தான் நான் முதலிடத்தைப் பெற முடிந்தது.

பாலிவுட் ஐ லவ் யூ

பாலிவுட் ஐ லவ் யூ

பாலிவுட்டை நான் நேசிக்கிறேன். இங்கு தொடர்ந்து கோலோச்ச விரும்புகிறேன். இங்கேயேதான் இருப்பேன். அதற்கு எனக்கு மன தைரியம் கொடுப்பதாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

என்னைக் கவர்ந்த ஆண்

என்னைக் கவர்ந்த ஆண்

உலகிலேயே என்னைக் கவர்ந்த ஆண் யார் என்று கேட்டால் அது எனது கணவர் டேணியல் வெப்பர்தான். அவர் ஒரு சூப்பர் ஹாட், செக்ஸி மேன். பெரிய இதயம் படைத்தவர். எனக்கு ஆதரவாக இருப்பவர். எனது தொழிலிலும் துணையாக இருப்பவர் என்றார் சன்னி.

2வது இடத்தில் தித்திக்கும் தீபிகா

2வது இடத்தில் தித்திக்கும் தீபிகா

2வது இடத்தில் பாலிவுட்டின் இன்னொரு நாயகியான தீபிகா படுகோனே இருக்கிறார். கவர்ச்சி, நடிப்பு, உணர்ச்சி, பாவம் என கொட்டிக் கொட்டிக் கொடுப்பவர் தீபிகா. கோச்சடையான், ஹேப்பி நியூ இயர், பைன்டிங் பானி ஆகிய படங்கள் இவருக்கு லேட்டஸ்டாக பெயர் வாங்கிக் கொடுத்தவையாகும்.

4வது இடத்தில் காத்ரீனா கைப்

4வது இடத்தில் காத்ரீனா கைப்

3வது இடத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸும், 4வது இடத்தில் காத்ரீனா கைபும் இடம் பெற்றுள்ளனர். மேடம் டுஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் காத்ரீனா கைபின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.

5வது இடத்தில் ஷ்ரியா

5வது இடத்தில் ஷ்ரியா

தமிழில் பல படங்களில் நடித்து திடீரென காணாமல் போன ஷ்ரியா சரணுக்கு இந்தப் பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது. பிரியங்கா சோப்ரா 6, ஷிரத்தா கப்பூர் 7வது இடம் பிடித்துள்ளனர்.

நர்கீஸ் பக்ரி

நர்கீஸ் பக்ரி

8வது இடத்தில் இருக்கிறார் நர்கீஸ் பக்ரி. இவர் தமிழில் பிரஷாந்த்துடன் சாகசம் படத்தில் நடித்துள்ளார். மெயின் தேரா ஹீரோ படம் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. குத்துப் பாட்டில் கெட்ட ஆட்டம் போட்டவரும் கூட.

என்றென்றும்...

என்றென்றும்...

அதேசமயம், என்றென்றும் உங்களைக் கவர்ந்த என்ற வரிசையில் ஐஸ்வர்யா ராயும், கரீனா கபூரும் தனியாக பிரிக்கப்பட்டு இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பலமுறை அதிகம் கவர்ந்தவராக தேர்வானவர்கள் என்பதால் இவர்களுக்குக் கெளரவம் தரும் வகையில் தனியாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
India has voted and chosen the Times 50 Most Desirable Women of 2014. The 20.3 lakh votes received online on www.itimes.com/polls along with our vote decided the winners.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil