»   »  ஹீரோயின் ஆன சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள்

ஹீரோயின் ஆன சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னது, சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் தியா அதற்குள் ஹீரோயினாகிவிட்டாரா என்று நினைக்க வேண்டாம். இது அவர்களின் ரியல் அல்ல ரீல் மகள்.

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவை நினைவிருக்கிறதா? ஆம், அதே குட்டிப் பொண்ணு தான். அவர் தெலுங்கில் ஹீரோயினாகிவிட்டார்.

அவர் நடித்த நிர்மலா கான்வென்ட் என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

ஸ்ரியா சர்மா

ஸ்ரியா சர்மா

சில்லுன்னு ஒரு காதல் குட்டிப் பொண்ணுக்கு தற்போது 19 வயதாகிறது. மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் அவர் படங்களில் நடித்தும் வருகிறார். இத்தனை நாள் ஹீரோக்களின் மகளாக நடித்த அவர் தற்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

ரோஷன் மேகா

ரோஷன் மேகா

நிர்மலா கான்வென்ட் படத்தில் ஸ்ரியாவின் ஜோடியாக நடித்துள்ள ஹீரோ ரோஷன் மேகா. முன்னாள் நடிகை சிவரஞ்சனியை நினைவிருக்கிறதா? தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை மணந்தாரே அவரின் மூத்த மகன் தான் இந்த ரோஷன்.

முதல் படம்

முதல் படம்

ரோஷன் ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் நிர்மலா கான்வென்ட். படத்தை தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தயாரித்துள்ளார். நாகர்ஜுனா நடிகர் நாகர்ஜுனாவாகவே படத்தில் வந்துள்ளார்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

நிர்மலா கான்வென்ட் இசை வெளியீட்டு விழாவுக்கு ரோஷனின் தந்தை ஸ்ரீகாந்த், தாய் சிவரஞ்சனி, தம்பி ரோஹன் ஆகியோர் வந்திருந்தனர்.

Read more about: shriya sharma, roshan
English summary
Suriya-Jyothika's daughter from Sillunu oru kadhal has become leading lady in telugu movie Nirmala convent.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil