»   »  இன்ஸ்டாகிராமில் நடிகை சுஷ்மிதா சென்: போட்டோ, வீடியோவை பார்த்தால் அசந்துடுவீங்க

இன்ஸ்டாகிராமில் நடிகை சுஷ்மிதா சென்: போட்டோ, வீடியோவை பார்த்தால் அசந்துடுவீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய கையோடு தனது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் மகள்கள் பாடும் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு திருமணமாகாவிட்டாலும் ரினி, அலிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரையும் கைக்குழந்தைகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது உலகமாக அவர்களின் மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சுஷ்மிதா இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார். கணக்கு துவங்கிய கையோடு அவர் கருப்பு நிறத்தில் படுகவர்ச்சியாக ஒரு ஆடையை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது தவிர தனது செல்ல மகள்களை பாட வைத்து வீடியோ எடுத்து அதையும் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். கைக்குழந்தைகளாக இருந்தவர்கள் வளர்ந்துவிட்டார்களே என்று வியந்துள்ளனர்.

மேலும் சுஷ்மிதா அந்த புகைப்படங்களில் மிகவும் அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Actress Sushmita Sen has made her debut on instagram with some hot pictures and a cute video.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil