»   »  சுஷ்மிதாவுக்கு ரூ.25 லட்சம் ஃபைன்!

சுஷ்மிதாவுக்கு ரூ.25 லட்சம் ஃபைன்!

Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டுக் காருக்கான வரியைக் கட்டாததால் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் வெளிநாட்டிலிருந்து டயோட்டா லேட் குருய்சர் காரை வாங்கினார். ஆனால் காரை தனது பெயரில் நேரடியாக வாங்காமல், இன்னொருவர் பெயரில் வாங்கி பின்னர் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.

வெளிநாட்டுக் காரை வாங்கினால், மும்பை மாநகராட்சிக்கு நுழைவு வரி கட்ட வேண்டும். ஆனால் அதைக் கட்டாமல் டபாய்த்து விட்டார் சுஷ்மிதா. இதையடுத்து மும்பை மாநகராட்சி சுஷ்மிதாவுக்கு அபராதம் போட்டது.

ஆனால் கட்ட மறுத்த சுஷ்மிதா, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வரி கட்டும்படி உத்தரவிட்டது. இதற்கு கால அவகாசமும் கொடுத்தது.

ஆனால் குறித்த காலத்திற்குள் வரியைக் கட்டத் தவறினார் சுஷ்மிதா. இதையடுத்து அவருக்கு ரூ. 25 லட்சம் அபராதத்தை உயர்நீதிமன்றம் விதித்தது. அதில், ரூ. 10 லட்சத்தை ஜாமீன் தொகையாக கட்ட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஜாமீன் தொகையை தனது வரி பாக்கிக்காக எடுத்துக் கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி கேட்க இப்போது மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil