»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானி ஒருவரைத் திருமணம் செய்துள்ளார் நடிகை சுவலட்சுமி.

"ஆசை"யில் அறிமுகமாகிய சுவலட்சுமி அதைத் தொடர்ந்து "கோகுலத்தில் சீதை", "லவ் டுடே", "ஹவுஸ் புல்","ஆண்டான் அடிமை" உள்ளிட்ட 29 படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே சட்டம் படித்துள்ள வங்காளத்துப் பெண்ணான சுவலட்சுமி சமீபத்தில் அமெரிக்கா சென்று குழந்தைகளுக்கான சட்டம்தொடர்பாகவும் படித்தார். அங்குள்ள பிரபல வக்கீலிடம் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டே சுவலட்சுமிஇந்தச் சட்டப் படிப்பைப் படித்து வந்தார்.

இதற்கிடையே சுவலட்சுமிக்கு மாப்பிள்ளை தேடும் வேலையும் படு வேகமாக நடந்து வந்தது. சட்டம் படித்துள்ளதங்கள் மகளுக்கு ஏற்ற படித்த, நன்கு வசதியுள்ள மாப்பிள்ளையை அவருடைய பெற்றோர் தேடி வந்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு லீனியர் ஆக்சலரேட்டர் மையத்தில்விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வரும் சுவாகத்தோ பானர்ஜி என்பவருக்கும் பெண் தேடும் படலம் நடந்துகொண்டிருந்தது.

சுவலட்சுமியின் குடும்பமும் பானர்ஜியின் குடும்பமும் பெரும் பணக்காரர்கள் என்பதால் இரு தரப்பினரும்சம்பந்தம் குறித்துப் பேசி, திருமணத்திற்கு நிச்சயமும் செய்து கொண்டனர்.

இதையடுத்து கடந்த மே 31ம் தேதி கோல்கத்தாவில் உள்ள சுவலட்சுமியின் இல்லத்தில் வைதீக முறைப்படிபானர்ஜியை அவர் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டினர் மட்டுமே கலந்து கொண்ட மிக எளிமையானதிருமணம் இது.

திருமணம் முடிந்ததும் பானர்ஜி-சுவலட்சுமி தம்பதியர் தற்போது அமெரிக்காவில் தேனிலவைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

தேனிலவு முடிந்ததும் வரும் ஆகஸ்டு 19ம் தேதி சென்னையில் சுவலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.

அதன் பிறகு "சன்" டிவியில் வெளியாகும் "சூலம்" தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும்திருமணமாகிவிட்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் சுவலட்சுமி கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil