»   »  அம்மா சுவலட்சுமி!

அம்மா சுவலட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்மா நடிகைகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார் வங்க தேவதை சுவலட்சுமி.

மும்பையிலிருந்தும், கேரளாவிலிருந்தும்தான் அழகுப் பெண்கள் தமிழ் சினிமாவுக்கு வருவார்கள் என்றில்லை. அவ்வப்போது வேறு பிரதேசத்திலிருந்தும் சிலர் வந்து போவார்கள். அழகிய மேகம் போல மேற்கு வங்கத்திலிருந்து ஆசை மூலமாக வந்தவர்தான் சுவலட்சுமி.

ஆசை படத்தில் உண்டான அழகிய அறிமுகத்தால் தொடர்ந்து முன்னணி இளம் நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் சுவலட்சுமி. ஆனால் அதிக படங்களில் சுவலட்சுமி நடிக்கவில்லை.

நடித்தபோதே தபால் மூலம் சட்டம் படித்து வந்த சுவலட்சுமி படிப்பை முடித்தவுடன் சத்தம் போடாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

சத்யராஜுடன் நடித்த ஆண்டான் அடிமை படம்தான் சுவலட்சுமிக்கு கடைசிப் படம். அப்படத்தில் நடித்து முடித்த கையோடு, சுவாகதோ பானர்ஜியை கல்யாணம் செய்து கொண்டார். பிறகு அழகிய பெண் குழந்தைக்கும் தாயானார் சுவலட்சுமி.

அதன் பிறகு அவர் சினிமா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. கணவர், குழந்தை என குடும்ப ஸ்தீரியாகி விட்டார். அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வரும் சுவலட்சுமியை பலரும் அக்கா, அம்மா வேடத்தில் நடிக்க அணுகினர். ஆனால் எல்லோருக்கும் சாரி சொல்லி விட்டார் சுவா. டிவி தொடர்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறி விட்டார்.

இந்த நிலையில், மணிவண்ணனின் அகதி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் சுவலட்சுமி. அதுவும் அம்மா வேடத்தில்.

மணிவண்ணன், சுவலட்சுமியை அணுகி அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். கதையைக் கேட்ட சுவலட்சுமிக்கு அது பிடித்துப் போகவே உடனே சரி சொல்லி விட்டாராம்.

இந்தப் படத்தில் நடிக்க மட்டும்தான் ஒப்புக் கொண்டுள்ளாராம். ஜெயம் ரவி நடிக்கும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலும் கூட நடிக்கக் கூப்பிட்டார்களாம். ஆனால் முடியாது என்று கூறி விட்டாராம் சுவா.

தனக்குப் பிடித்த கேரக்டராக இருந்ததால்தான் அகதியில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறும் சுவலட்சுமி, மனதுக்குப் பிடித்தால்தான் நடிப்பேன் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil