Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திமிரு படத்துக்கு பிறகு இதற்காகத்தான் நிறைய படத்துல நடிக்கல - ‘சுழல்’ ஸ்ரேயா ரெட்டி ஓப்பன் டாக்!
சென்னை: நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து படம் பார்த்தவர்களை தனது ஆக்ரோஷமான நடிப்பால் கதிகலங்க வைத்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி.
விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவி தான் ஸ்ரேயா ரெட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி உள்ள சுழல் வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் திமிரு படத்துக்கு பிறகு ஏன் அதிக படங்களில் கமிட் ஆகவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
தூசித்
தட்டப்படும்
தேவர்
மகன்
2
படம்..
கமலுக்கு
மகனாக
யார்
நடிக்கறாங்க
தெரியுமா?

சாமுராய் படத்தில் அறிமுகம்
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சாமுராய் திரைப்படம் கடந்த 2002ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் நிஷா எனும் கதாபாத்திரத்தில் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரேயா ரெட்டி. "ஒரு நதி.. ஒரு பெளர்ணமி" பாடலுக்கு நடனமாடி இருப்பார். திமிரு படத்தில் நடிப்பதற்கு முன்னமே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.

விஷால் அண்ணி
நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுடன் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா ரெட்டி. திமிரு படத்தில் நடித்த போது விக்ரம் கிருஷ்ணாவுக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் கிருஷ்ணா - ஸ்ரேயா ரெட்டிக்கு அழகான ஒரு மகள் உள்ளார்.

மிரட்டல் வில்லி
இயக்குநர் தருண் கோபி இயக்கத்தில் விஷால், ரீமா சென் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு திமிரு படம் வெளியானது. அந்த படத்தில் ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் வெறித்தனமான வில்லியாக நடித்திருப்பார் ஸ்ரேயா ரெட்டி. அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இன்னமும் ஸ்ரேயா ரெட்டி என்றாலே திமிரு படம் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்.

சுழல் வெப்சீரிஸ்
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் புஷ்கர் - காயத்ரி திரைக்கதை எழுத பிரம்மா இயக்கிய சுழல் வெப்சீரிஸில் ரெஜினா தாமஸ் எனும் போலீஸ் அதிகாரியாக நடிப்பை பிரித்து மேய்ந்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸில் பாசமுள்ள தாயாகவும் லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரியாகவும், சரக்கு அடிக்கும் பெண்ணாகவும், கிரைமை கண்டுபிடிக்கும் இடங்களில் மிரட்டலாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏன் அதிக படங்களில் நடிக்கல
சுழல் வெப்சீரிஸின் வரவேற்பை தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள் அவரிடம் பேட்டி எடுத்து வருகின்றன. இந்நிலையில், திமிரு படத்துக்கு பிறகு ரொம்பவே செலக்டிவான படங்களில் மட்டுமே ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார், அது ஏன் என்கிற கேள்விகு? திமிரு படத்தில் நல்லா நடிச்சிட்டேன். அதுவே எனக்கு திருப்தி அளித்தது. அந்த அளவுக்கு ரோல் வந்தால் தான் நடிக்க வேண்டும் என்றே பல கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டேன் எனக் கூறி உள்ளார். இனி அடிக்கடி அவருடைய அசுரத்தனமான நடிப்பை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.