»   »  டாக்டர் சொர்ணாக்கா!

டாக்டர் சொர்ணாக்கா!

Subscribe to Oneindia Tamil

சொர்ணமால்யாவைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம்.

கல்யாணம் ஆவதற்கு முன்பு வரை டிவி ஸ்டார், கல்யாணம் ஆகி விவாகரத்து விவகாரம் கிளம்பிய பின்னர் ஆனால் சினிமா ஸ்டார். அப்புறம் சங்கராச்சாரியார் சிக்கலில் மாட்டி தவித்தபோது, கிளாமர் ஸ்டாராக பார்க்கப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அவதாரம் என சொர்ணமால்யாவின் கலை வாழ்க்கை களை கட்டி வந்து கொண்டிருக்கிறது.

இடையில் சொர்ணமால்யா ஆபாசமாக நடித்துள்ளதாக செல்போன் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சொர்ணமால்யாவை அதிகம் வெளியுலகில் பார்க்க முடியவில்லை. பரதநாட்டிய, நாடக நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார் சொர்ணா.

இந்த நிலையில் அவர் நடித்துள்ள மொழி படம், சொர்ணாவின் 2வது இன்னிங்ஸுக்கு வழி வகுத்துள்ளதாம். மொழி படத்தில் சிறப்பாக நடித்துள்ளதால், புதுப் படங்கள் நிறையத் ேதடி வருகிறதாம்.

இதனால் சந்தோஷமாகியுள்ள சொர்ணா நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதேசமயம் நாட்டிய நாடகங்களையும் தொடர்ந்து போடப் போகிறாராம்.

நடிப்பு, நாடகத்தோடு சைடில் ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். அதாவது பி.எச்.டி. செய்து வருகிறாராம். விரைவிலேயே தீஸிஸ் சப்மிட் செய்து டாக்டர் பட்டத்தையும் வாஙப் போகிறாராம்.அப்ப இனிமே சொர்ணமால்யா, டாக்டர் சொர்ணாக்கா!

சொர்ணமால்யாவின் தங்கச்சி ராதிகாவும் நல்ல திறமைக்காரர் தான். தனியார் எப்.எம். ஒன்றில் ஜாக்கியாக அசத்தி வருகிறாராம் ராதிகா.

கலகலா குடும்பம்தான்!

Please Wait while comments are loading...