»   »  சோகத்தில் சொர்ணமால்யா

சோகத்தில் சொர்ணமால்யா

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலம் புன்னகை மன்னியாக அறியப்பட்ட சொர்ணமால்யா இப்போதுசோகத்தில் மூழ்கியிருக்கிறார்.

சோகத்திற்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் மட்டும் காரணமல்ல; எந்த சினிமா உலகை நம்பி, மணவாழ்க்கை முறிந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருந்தாரோ அதே சினிமா உலகம் தன்னைக் கைவிட்டது தான்சோகத்திற்கு பெரிய காரணம்.

கதாநாயகியாக நடிப்பது என்ற முடிவுடன்தான் கோலிவுட்டில் களமிறங்கினார். கல்யாணத்திற்குப் பிறகும்கவர்ச்சிக்கு ரெடி என்றார். ஆனால் எங்கள் அண்ணாவில் இரண்டாவது கதாநாயகி வேடம் தான் கிடைத்தது.அந்தப் படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடித்தார்.

இதில் சொர்ணமால்யாவுக்கு பிரபுதேவாவின் நெருங்கிய நட்பு கிடைத்ததே தவிர, படம் எதுவும்கிடைக்கவில்லை. பிரபுதேவாவே படம் இல்லாமல் இருக்கும்போது, நட்பை வைத்து என்ன செய்ய? பெருமாளேபஸ்சில் போகும்போது, பூசாரி புல்லட் கேட்டால் கிடைக்கவா போகிறது?

இதற்கிடையே போட்டோ செஷன் நடத்தி கவர்ச்சியாக எடுத்த ஸ்டில்ஸ் எல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிஅனுப்பி தாவு தீர்ந்து போனது. அடுத்து ஒரு போட்டோ செஷன் நடத்தி, தமிழில் வாய்ப்பு தேடினாலும்கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு. இதனால் வேறு மொழிகளில் கவனம் செலுத்தும் முடிவுக்கு வந்தார்சொர்ணமால்யா.

கொடுப்பதைக் கொடுங்கள் என்ற கோரிக்கையோடு திருவனந்தபுரம் சென்ற சொர்ணமால்யாவுக்கு அடித்ததுஜாக்பாட். மம்முட்டிக்கு ஜோடியாக பிளாக் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம்மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நினைத்திருந்த சொர்ணமால்யாவின் சந்தோஷம் ரொம்ப நாள்நீடிக்கவில்லை.

திடீரென பிளாக் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக ஸ்ரேயா ரெட்டி என்பவரைசேட்டன்கள் ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இருப்பினும் மலையாளப் படவுலகம் முற்றிலும் அவரை நிராகரித்து விடவில்லை. ரஞ்சித் லால் இயக்கத்தில்உருவாகவுள்ள எந்நட்டும் என்ற படத்தில் சொர்ணமால்யா நடிக்கவுள்ளார். இதில் பைவ் ஸ்டார் பட நாயகிகனிகாவும் இருக்கிறார். மலையாளி என்பதால் அவரை ஹீரோயினாக்கிவிட்டு சொர்ணமால்யாவைடம்பியாக்கிவிட்டார்களாம். எனவே மீண்டும் சோகத்துடன் இருக்கிறார் இளமை புதுமை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil