»   »  நான் அக்காவா? -சுவாதி!

நான் அக்காவா? -சுவாதி!

Subscribe to Oneindia Tamil

அக்கா வேடத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டு வந்த தயாரிப்பாளரை அடிக்காத குறையாக விரட்டி விட்டுள்ளாராம் சுவாதி.

ஒரு காலத்தில் ரசிகர்களை தனது ஒய்யார அழகால் சொக்க வைத்தவர் சுவாதி. விஜய்க்கு ஜோடியாக செல்வா, தேவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜீத்தின் மனம் கவர்ந்த பழைய நாயகியர் பட்டியலில் சுவாதிக்கும் இடம் இருந்தது.

இளம் ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு அடித்து வந்த சுவாதிக்கு பின்னர் வாய்ப்புகள் சுகப்படவில்லை. மார்க்கெட் டவுண் ஆனதால் 2வது நாயகி, சிங்கிள் பாட்டுக்கு ஜங்கிள் ஆட்டம் என காலத்தைத் தள்ளி வந்தார் சுவாதி.

இடையில், ரமேஷ் கண்ணாவுடன் காதலில் விழுந்தார் என்று கூட சுவாதியைப் பற்றி சின்னதாக ஒரு வதந்தி வந்து பின்னர் காணாமல் போனது.

இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் சுவாதியைத் தேடி சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் போனார். அவர் தயாரித்து வரும் படம் சாது மிரண்டா. இப்படத்தின் நாயகி, மலையாளத்து காவ்யா மாதவன். அவருடைய அக்கா வேடத்தில் சுவாதியை புக் பண்ணத்தான் போனார் அந்தத் தயாரிப்பாளர்.

ஆனால் அக்கா கேரக்டர் என்று கூறியவுடன் கடுப்பாகி விட்டாராம் சுவாதி. தயவு செய்து இப்படிப்பட்ட கேரக்டருக்காக என்னைத் தேடி இனிமேல் வராதீர்கள் என்று வலியக்க வரவழைத்துக் கொண்ட கடுப்புப் புன்னகையுடன் தயாரிப்பாளரை திருப்பி அனுப்பி விட்டாராம்.

எனக்குள் இன்னும் இளமைப் பொறி கணன்று கொண்டுதான் இருக்கிறது. அது இன்னும் அணையவில்லை. அது இருக்கும் வரை நான் கண்டிப்பாக ஹீரோயினாகத்தான் நடிப்பேன். அக்கா, தங்கச்சி, கொழுந்தியா, மச்சினி என்று வேறு எந்த கேரக்டரிலும் நடிக்க மாட்டேன் என்று வீராப்புடன் கூறுகிறார் சுவாதி.

வைராக்கியம் வெல்லட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil