»   »  எனக்கு கவர்ச்சி முத்திரை குத்தாதீர்கள்!– ஸ்வேதாமேனன்

எனக்கு கவர்ச்சி முத்திரை குத்தாதீர்கள்!– ஸ்வேதாமேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருபதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு ஸ்வேதா மேனனை தெரியாமல் இருக்கிறது. பாலிவுட்டுக்கு ஒரு சன்னி லியோன் என்றால் மல்லுவுட்டுக்கு ஒரு ஸ்வேதா மேனன்.

ரதி நிர்வேதம் உள்பட பல படங்களில் நடித்து சூடேற்றியவர் தனது பிரசவத்தையே படமாக்கி இந்திய அளவில் கவனிக்க வைத்தார். தமிழில் நான் அவனில்லை 2, துணை முதல்வர் படங்களில் நடித்த ஸ்வேதா மேனனுக்கு நல்ல கேரக்டர் ரோலில் நடிக்கத் தான் ஆசையாம்.

Swetha Menon wants to be homely

இப்போது தமிழில் நடிக்கும் 'இணையதளம்' படத்தில் ஸ்வேதாமேனனுக்கு ஹீரோயின் வேடமாம். அதுவும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த துப்பறியும் போலீஸ் கேரக்டர்.

''எனக்கு ஏன் இந்த கவர்ச்சி முத்திரை விழுந்தது என்றே தெரியவில்லை. என்னைவிட பலர் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். எனக்கு கவர்ச்சி வேடங்களைவிட நல்ல மனதில் பதியும் கேரக்டர்களில் நடிக்கத்தான் ஆசை,'' என்று ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார்.

English summary
Actress Swetha Menon has requested not to stamp glam image on her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil