»   »  செவத்த புள்ளையாக இருப்பதால் டாப்ஸிக்கு இப்படி ஒரு சோதனையா?

செவத்த புள்ளையாக இருப்பதால் டாப்ஸிக்கு இப்படி ஒரு சோதனையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் நடத்துவதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் நடிகை டாப்ஸி. சிவப்பாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்ததாகவும் டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிங்க் இந்தி படத்தில் அவரின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அமித் ராய் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள ரன்னிங் ஷாதி. காம் படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது.

அந்த படத்தை விளம்பரப்படுத்து வருகிறார் டாப்ஸி.

சிவப்பழகு கிரீம்

சிவப்பழகு கிரீம்

இயற்கையாவே சிவப்பழகியான டாப்ஸி சிவப்பழகு கிரீம்களை ஆதரிப்பது இல்லை. சிவப்பு தான் அழகு என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் மார்ச் மாதம் ஜெய்பூரில் சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் டாப்ஸி.

டாப்ஸி

டாப்ஸி

ஜெய்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டேன். நிகழ்ச்சியில் சிவப்பழகு கிரீமுடன் போஸ் கொடுக்க வேண்டும் என்றார்கள். அதை கேட்டவுடன் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று கூறிவிட்டேன்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

சிவப்பாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்தேன். அதனால் சிவப்பு தான் அழகு என்பதை ஒரு நாளும் நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

டாப்ஸி தற்போது நான்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் இந்தி மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Taapsee has cancelled an upcoming event as it is organised by fairness cream brand. She said that she actually lost out on a few films because of being fair.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil