»   »  முதுகு முழுக்க டாட்டூ போட்ட டாப்ஸி... உண்மையா? பொய்யா?

முதுகு முழுக்க டாட்டூ போட்ட டாப்ஸி... உண்மையா? பொய்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதுகு முழுக்க பெண்ணின் அழகான ஓவியம் வரைந்து கொண்டு டாப்ஸி அளித்துள்ள போஸ்தான் இப்போது ஹாட் டாபிக். ஒரு பாலிவுட்டில் ஒரு பாட்டிற்கு ஆடும் டாப்ஸி, அந்த பாடலின் ஒரு காட்சிக்காக இப்படி டாட்டூ வரைந்து நடித்துள்ளாராம்.

திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட கோலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை பலர் கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தங்களுக்கு பிடித்தவகையில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர்.

இது நிரந்தரமாக இருக்கும்படி வரையப்படுகிறது. படங்களில் மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கும்போது தேவைக்கு ஏற்ப தற்காலிக டாட்டூக்கள் வரைந்துகொண்டு காட்சிக்கு பிறகு அதை அழித்து விடுகின்றனர்.

தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க சினிமாவில் போராடிக்கொண்டிருக்கிறார் டாப்ஸி. அங்கொன்று இங்கொன்றுமாக இந்தியில் நடிக்க வாய்ப்பு வருகிறது. முடிந்தவரை அதில் முழுதிறமையையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர முயல்கிறார்.

படத்திற்காக டாட்டூ

படத்திற்காக டாட்டூ

‘தும் ஹோ டோ லக்தா ஹை' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் முதுகுபுறத்தில் அழகிய பெண் உருவத்தை டாட்டூ வரைந்து நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டதும் கதையில் தனது ஈடுபாட்டை உணர்த்தும் வகையில் உடனே சம்மதம் தெரிவித்ததுடன் டாட்டூ வரைந்துகொண்டு நடித்திருக்கிறாராம்.

நடிகைகளும் டாட்டூவும்

நடிகைகளும் டாட்டூவும்

டாட்டூ குத்திக் கொள்வதில் குஷ்பு, திரிஷா, ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன், டாப்ஸி ஆகியோர் முக்கியமானவர்கள். அண்மையில் அக்ஷரா ஹாசன் தன் கையில் ஒரு ரோஜாப்பூ டாட்டூவை குத்தி ரொம்ப அவஸ்தைப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. ஸ்ருதி தன் பெயரையே முதுகில் டாட்டூவாக குத்தியிருக்கிறார்.

டாப்ஸியின் டாட்டூ சர்ச்சை

டாப்ஸியின் டாட்டூ சர்ச்சை

டாப்ஸி ஒரு இக்கட்டான இடத்தில் டாட்டூ குத்தியிருப்பதை மீடியாக்கள் கண்டுபிடித்து மக்களுக்கு அந்த தகவலை அறிவித்திருக்கிறது. "அட போங்கப்பா! இது நான் படிக்கும்போதே குத்தினது. நானே அதை பார்த்து பல நாளாச்சு. அடிக்கடி பார்த்தா போரடிச்சிடும்னு நான்தான் அங்க குத்தினேன் என்று கூறி மிரளவைத்தார்.

முதுகில் வரைந்த ஓவியம்

முதுகில் வரைந்த ஓவியம்

இப்போது இசையமைப்பாளர் பூஷன் குமாரின் சிங்கிள் பாடலில் டாப்ஸியுடன் ஆடும் சாஹிப் சலீம் ஒவியராக நடிப்பதால் அவர் வரைவது போன்ற காட்சிக்கு எடுக்கப்பட்ட ஸ்டில்லை டாப்ஸியே வெளியிட்டு டெம்போ கிளப்பியுள்ளார். இந்த முதுகு ஓவியமும் அழகாகத்தான் இருக்கிறது என்கின்றனர் டாப்ஸியின் ரசிகர்கள்.

English summary
According to reports, the tattoo is a temporary one that has been exclusively inked for a song, ‘Tum Ho Toh Lagta Hai’, which is part of Bhushan Kumar’s new single.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil