»   »  ஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி

ஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி- வீடியோ

மும்பை: அரை குறை ஆடை அணிந்த நடிகை டாப்ஸியை நெட்டிசன்ஸ் கிண்டலடிக்க அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் டாப்ஸி. அவர் வருண் தவானுடன் சேர்ந்து நடித்த ஜுட்வா 2 ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் டாப்ஸி ட்விட்டரில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

புகைப்படம்

டாப்ஸி ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். அவரது உடை அரைகுறையாக உள்ளதாகக் கூறி பலர் அவரை கிண்டல் செய்தனர்.

கிண்டல்

டாப்ஸியின் புகைப்படத்தை பார்த்த ஒருவர் இதனால் தான் ஆண்கள் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று ட்வீட்டினார். இதை பார்த்த டாப்ஸி அந்த வகையான ஆண்கள் தான் திருந்த வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

கலாய்

ஆடை வாங்க பணம் இல்லையா இல்லை உடம்பை காட்டுகிறீர்களா என்று கேட்டவரிடம் டாப்ஸி கூறியிருப்பதாவது, கலாச்சாரத்தை பாதுகாப்பவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களை கண்டுபிடிக்கவே இப்படி செய்தேன். இல்லை என்றால் உங்களை போன்ற வைரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று கலாய்த்துள்ளார்.

சபாஷ்

தன்னை விமர்சிப்பவர்களுக்கு நச்சு நச்சுன்னு பதிலடி கொடுத்த டாப்ஸியை ஜுட்வா 2 ஹீரோ வருண் தவான் பாராட்டியுள்ளார்.

English summary
Actor Taapsee Pannu, a strong supporter of women’s empowerment, poked fun at a few social media users who trolled her online for wearing a short dress.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil