»   »  அந்த நடிகையுடன் மல்லுக்கு பாய்ந்தேனா?: டாப்ஸி விளக்கம்

அந்த நடிகையுடன் மல்லுக்கு பாய்ந்தேனா?: டாப்ஸி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கும், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்தி படம் ஜுட்வா 2. இந்த படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் என இரண்டு ஹீரோயின்கள்.

இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே பிரச்சனையாம்.

டாப்ஸி

டாப்ஸி

ஜாக்குலினுக்கும் எனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. லண்டனில் படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் செம ஜாலியாக இருந்தோம். நான் ரசித்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் டாப்ஸி.

ஜாக்குலின்

ஜாக்குலின்

டாப்ஸிக்கும், தயாரிப்பாளர் சாஜித் நாதியத்வாலாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி நெருக்கமாகிவிட்டார்கள். அதனால் படத்தில் டாப்ஸிக்கே முக்கியத்துவும் தருகிறார்கள் என்று ஜாக்குலின் கிளப்பிவிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இயக்குனர்

இயக்குனர்

டாப்ஸி முகத்தில் விழிக்காத மாதிரி படத்தை ஷூட் பண்ணுங்க என்று ஜாக்குலின் இயக்குனரிடம் தெரிவித்துள்ளாராம். நடிகைகளின் பிரச்சனையாால் இயக்குனர் தான் டென்ஷனாக உள்ளாராம்.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று கிளப்பிவிட்டு படத்திற்கு பப்ளிசிட்டி தேடுவது புதிது அல்ல. அதனால் இது ஜுட்வா 2 படத்திற்கு விளம்பரம் தேடும் வேலை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Taapsee has rubbished the rumour about the ego clash between her and actress Jacquline Fernandes while acting in Judwaa 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil