»   »  தொப்புளில் போய் தேங்காய்: பிரபல இயக்குனரை கலாய்த்த டாப்ஸி

தொப்புளில் போய் தேங்காய்: பிரபல இயக்குனரை கலாய்த்த டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொப்புளில் தேங்காயை போடுவது கவர்ச்சியானது என்று நினைக்கிறார்கள் என்று தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் பற்றி நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

கே. ராகவேந்திர ராவ் இயக்கிய ஜும்மாண்டி நாதம் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் டாப்ஸி. தெலுங்கை அடுத்து தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடிக்கத் துவங்கினார்.

இந்நிலையில் டாப்ஸி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் டாப்ஸி கூறியிருப்பதாவது,

கிளாமர்

கிளாமர்

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே என்னால் நடிக்க முடியும் என்று தெற்கு பக்கம் நினைக்கிறார்கள். பிங்க் மற்றும் நாம் ஷபானா படங்களை பார்த்த பிறகே ஓ, இந்த பொண்ணுக்கு நடிக்கத் தெரியும் என்று புரிந்து கொண்டனர்.

தொப்புள்

தொப்புள்

தெற்கு பக்கம் தொப்புள் மீது அதிக ஆர்வம் காட்டுவது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அதை அழகாக்கிவிட்டு சென்றிருப்பேன். ஆனால் எனக்கு தெரியாமல் போச்சே.

பாடல்

பாடல்

என் முதல் படத்தில் பாடல் காட்சியை தான் முதலில் படமாக்கினார்கள். என்னை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனர் பெண்களின் இடுப்பை காட்டி, அதில் பழம், பூக்களை வீசுவதற்கு பெயர் போனவர்.

தேங்காய்

தேங்காய்

அந்த இயக்குனரின் படங்களில் ஹீரோயின்களின் இடுப்பில் எதையாவது போடுவதை நான் பார்த்துள்ளேன். என் இடுப்பில் தேங்காயை வீசினார்கள். தேங்காயை இடுப்பில் போடுவது எப்படி கவர்ச்சியாகும் என தெரியவில்லை என்றார் டாப்ஸி.

Read more about: taapsee, actress, டாப்ஸி
English summary
Taapsee has taken a dig at popular Tollywood director K. Raghavendra Rao by commenting about throwing flowers, coconut on actress' midriff.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil