»   »  மீண்டும் தாரிகா

மீண்டும் தாரிகா

Subscribe to Oneindia Tamil
Tarika
கன்னடம், மலையாளம், சின்னத் திரை, குத்துப் பாட்டு என அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்த தாரிகா பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஹீரோயின் வேடம் பூண்டு நடிக்க வந்துள்ளார்.

கன்னடத்தில் படு கிளாமராக நடித்து வந்தவர் தாரிகா. அங்கு கவர்ச்சி சேவை புரிந்து கொண்டிருந்த அவரை ராதிகா அழைத்து தனது சித்தி சீரியலில் அழுவாச்சி கேரக்டரில் நடிக்க வைத்தார்.

சித்தி சீரியல் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிலும் பிரபலமானார் தாரிகா. அதன் பின்னர் சீரியல்களில் தீவிரமாக நடித்து வந்த அவர் மறுபடியும் பெரிய திரைக்கு முயற்சித்தார்.

ஆனால் அவரைத் தேடி ஹீரோயின் வாய்ப்பு வரவில்லை. மாறாக குத்துப் பாட்டுக்கு ஆடும் வாய்ப்புகள்தான் தேடி வந்தன. யோசித்துப் பார்த்த அவரும் ஆடத் தயார் என அழைப்பு விடவே முதல் பாடலாக தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டார்.

தாரிகாவின் படு பயங்கர கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்கள் குதூகலித்தார்களே தவிர தயாரிப்பாளர்கள் யாரும் தாரிகாவை சீந்தவில்லை. ஈர நிலம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வந்தன. இதனால் தாரிகாவின் தமிழ் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதனால் அப்செட் ஆன தாரிகா மலையாளப் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அங்கும் குத்துப் பாட்டுக்களேக் கிடைத்தன.

இதனால் வெறுப்பான தாரிகா, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாக பெரிய திரைக்குக் கும்பிடு போட்டு விட்டு மறுபடியும் சின்னத்திரைக்கு மாறினார். ஓரிரு சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது மறுபடியும் பெரிய திரைக்கு வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக அவர் நடிக்கும் படம் கரிசல் மண். சரண்ராஜ்தான் தாரிகாவின் ஜோடியாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர். சீமானின் உதவியாளரான சுப.தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார்.

தாரிகாவின் இந்த புதிய இன்னிங்ஸாவது அவருக்கு தமிழில் மார்க்கெட்டைத் தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம

Read more about: tarika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil