»   »  45 வயதான தபு, மும்பை தொழிலதிபரை மணக்கிறார்!

45 வயதான தபு, மும்பை தொழிலதிபரை மணக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

45 வயதாகும் பிரபல இந்தி நடிகை தபு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். மும்பை தொழிலதிபரை அவர் மணக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் 'காதல் தேசம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தபு.

நாகார்ஜூனாவுடன்

நாகார்ஜூனாவுடன்

தபுவுக்கு 45 வயதாகிறது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இருவரைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் பரவின.

காதல்

காதல்

வேறு ஒரு நடிகருடன் தபுவுக்கு காதல் இருந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

பெற்றோர் பிரிந்ததால்...

பெற்றோர் பிரிந்ததால்...

தபு பிறந்த சில நாட்களிலேயே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனால் திருமணம் குறித்து வெறுப்புற்ற மனநிலையில் இருந்தார் தபு.

வேண்டாம் திருமணம்

வேண்டாம் திருமணம்

திருமணம் குறித்து பேச்சு வரும்போதெல்லாம், "என் தந்தையை நான் பார்த்ததில்லை. அவரை சந்திக்கவும் விருப்பமில்லை. எனக்கு தந்தையாகவும், என் தாய் இருக்கிறார். நான் அவருக்குத் துணையாக இருக்கிறேன். திருமணமே வேண்டாம்," என்று கூறிவந்தார் தபு.

திருமண ஆசை

திருமண ஆசை

தபுவுக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்தனர். ஆனால் தபு மறுத்துவிட்டார். திருமணமே வேண்டாம் என்பதே அவர் பதிலாக இருந்தது. ஆனால் 45 வயதில் தனிமையில் வாழும் அவருக்கு இப்போது திருமண ஆசை வந்துவிட்டது.

மும்பை தொழிலதிபர்

மும்பை தொழிலதிபர்

மும்பை தொழில் அதிபர் ஒருவரை தபு மணக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கின்றனவாம். சமீபத்தில் த்ரிஷ்யம் இந்திப் பட பிரஸ் மீட்டில் இதனை மறைமுகமாகத் தெரிவித்தார் தபு.

English summary
Actress Tabu will enter wedding life soon with a Mumbai based industrialist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil